நடுவானில் என்ஜின் பிரச்சனை.. பெங்களூர் நோக்கி சென்ற விமானம் சென்னையில் தரையிறக்கம்! என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. 113 பேருடன் புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு கண்டறியப்பட்ட நிலையில், விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பொதுவாக விமானங்களில் உச்சபட்ச பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும். இதனால் விமானங்கள் தான் உலகில் பாதுகாப்பான போக்குவரத்து முறையாக இருக்கிறது.

அதேநேரம் அதையும் தாண்டி சில நேரங்களில் விமானத்தில் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு, அவசர அவசரமாகத் தரையிறக்கப்படும் சம்பவங்கள் நடக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
என்ன நடந்தது:
சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. 113 பேருடன் பெங்களூர் புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்ட விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. இதனால் மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், பயணிகளின் உயிரும் காப்பாற்றப்பட்டு இருக்கிறது.
பெங்களூர் நோக்கிச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 20ஆவது நிமிடத்தில் மீண்டும் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானம் நடுவானில் இருந்த போது என்ஜின் கோளாறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தரையிறக்கம்:
அந்த விமானத்தில் 107 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என மொத்தம் 113 பேர் இருந்துள்ளனர். காலை 8.40 மணிக்கு அந்த விமானம் சென்னை ஏர்போர்ட்டில் இருந்து புறப்பட்டது. இருப்பினும் விமானம் கிளம்பிய சில நொடிகளில், என்ஜின் செயலிழப் பைலட் கண்டுபிடித்து இருக்கிறார். இதையடுத்து இது தொடர்பாக உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து விமானம் மீண்டும் சென்னைக்கு திருப்பப்பட்ட நிலையில், காலை 9.05 மணியளவில் விமானம் அவசரமாகச் சென்னையில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கிய உடனேயே பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வெயிட்டிங் ஏரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து விமானத்தில் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டது. மாற்று விமானம் மூலம் பயணிகளைப் பெங்களூர் அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான போக்குவரத்து
விமானம் என்பது பல நூறு பேரின் உயிர் சம்பந்தமான விஷயம் என்பதால் அனைத்து விமானங்களும் தொடர்ச்சியாகச் சோதனை செய்யப்படும். இதன் காரணமாகவே உலகில் மிகவும் பாதிப்பான போக்குவரத்து முறையாக விமானங்கள் உள்ளன. இருப்பினும், அதையும் தாண்டி நடுவானில் பறக்கும் போது சில சமயம் விமான கோளாறு கண்டுபிடிக்கப்பட்டால் அவை உடனடியாக இதுபோல தரையிறக்கப்பட்டு தேவையான சோதனைகள் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்கள் எடுத்த முடிவு.. பெங்களூர், மும்பை பயணிகளுக்கு அதிர்ச்சி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications