மனைவி பிரசவத்திற்கு லீவு கேட்டா.. மருத்துவமனையிலிருந்து வேலை பார்க்க சொல்லும் கார்ப்பரேட் நிர்வாகம்!
சென்னை: வொர்க்-லைப் பேலன்ஸ் என்பது பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக கார்ப்பரேட் நிர்வாகங்கள், ஊழியர்களை நவீன கொத்தடிமைகளை போல நடத்துகிறார்கள் என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துக்கொண்டே இருக்கின்றன. இந்த குற்றச்சாட்டுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக தற்போது ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
கார்ப்பரேட் ஊழியர் ஒருவர் தனது மனைவியின் பிரசவத்திற்கு விடுப்பு கேட்டிருக்கிறார். இதற்கு மேலாளர் சொன்ன பதிலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்திருக்கிறார். ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட இந்த போஸ்ட் பரவலாக ஷேராகி வருகிறது.

மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனவே 2 நாட்கள் லீவு வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் லீவு தர மறுத்த மேனேஜர், இப்போதைக்கு லீவு கிடையாது என்றும் கொஞ்ச நாட்களுக்கு பிறகு லீவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு மாற்று வழி மருத்துவமனையில் இருந்து வேலை பார்க்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இத்துடன் அவர் நிறுத்தவில்லை. மனைவியின் பிரசவத்திற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று குதர்க்கமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த ஊழியர், "என்னால் மருத்துவமனையில் இருந்து வேலை பார்க்க முடியாது. என்னுடைய மனைவிக்கு முதல் பிரசவம் இது. எனவே இரண்டு நாட்கள் விடுப்பு தேவை" என்று கேட்டிருக்கிறார்.
பின்னர் வேண்டா வெறுப்பாக மேனேஜர் லீவு கொடுத்து இருக்கிறார். இந்த வாட்ஸ்அப் உரையாடலை ஊழியர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
ஊழியர்களுக்கு உரிய காலத்தில் விடுப்பு கொடுப்பது, ஊழியர்களுடைய உரிமைகளை பாதுகாப்பது, உழைப்பு சுரண்டலை தடுப்பது ஆகியவற்றை உறுதி செய்ய சமீபத்தில்தான் நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலாக்கப்பட்டது. இருப்பினும் கார்ப்பரேட் ஊழியர்கள் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவது தொடர்கதையாக இருக்கிறது.
இந்த வாட்ஸ்அப் உரையாடல் குறித்து சோசியல் மீடியாக்களில் பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். பிரசவ காலத்தில் கூட விடுப்பு கொடுக்க முடியாத அளவுக்கு இந்திய மேனேஜர்கள் ஏன் கல் நெஞ்சம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்? என்று சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
-
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் ஆபீசர் வேலை.. 40 ஆயிரம் சம்பளம்! டிகிரி முடிச்சவங்க தட்டி தூக்கலாம் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications