நாளை முதல் சென்னையில்.. மது பாட்டிலுக்கு ரூ.10 அதிகம்! காலி பாட்டிலை கொடுத்தால் 10 ரூபாய் ரிட்டர்ன்!
சென்னை: சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நாளை (ஜனவரி 6) முதல் அமலுக்கு வருகிறது. மது பாட்டில்களை வாங்கும்போது கூடுதலாக பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கப்படும். காலி பாட்டில்களை அதே டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒப்படைத்து ரூ.10 திரும்பப் பெறலாம்.
நாளை (ஜனவரி 6 ஆம் தேதி) முதல் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமலுக்கு வருகிறது. முதற்கட்டமாக சென்னையின் மூன்று முக்கிய பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மத்தி ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்படுகிறது.

மதுப்பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மது பாட்டில்களை வாங்கும் போது, அதன் விலையுடன் கூடுதலாக பாட்டில் ஒன்றுக்கு ரூ. 10 வசூலிக்கப்படும். மது வாங்கும் போது பாட்டிலுக்கான கூடுதல் வைப்புத் தொகையாக (Deposit) ரூ. 10 செலுத்த வேண்டும். மது அருந்திய பிறகு காலி பாட்டில்களை அதே மதுபான விற்பனை நிலையத்திலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளிலோ ஒப்படைக்கலாம். பாட்டிலை ஒப்படைக்கும் போது, ஏற்கனவே கூடுதல் தொகையாகச் செலுத்திய ரூ.10 ஐ வாடிக்கையாளர்கள் உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், "டாஸ்மாக் லிட், சென்னை (வடக்கு, தெற்கு, மத்திய) மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் 06-01-2026 முதல் அமல்படத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி, மதுபாட்டில்களை வாங்கும் போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்தவேண்டும்.
மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.10-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. அதன்படி, பத்து ரூபாய் கூடுதலாக கொடுத்து மதுபான பாட்டில் வாங்கிவிட்டு, காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும்போது 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டம் ஏற்கனவே நீலகிரி, கோவை, பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், தருமபுரி, தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னையிலும் இந்த நடைமுறை அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications