வில்லங்க சான்றிதழில் வில்லங்கம்.. மிரள வைத்த மதுரை திருப்பரங்குன்றம்.. பரபர உத்தரவை தந்த ஹைகோர்ட்
சென்னை: பத்திரப்பதிவு, ஆவண விவகாரங்களில் யார் அலட்சியம் காட்டினாலும் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், மதுரையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் என்பது மிகமிக அவசியமானது.. அதனால்தான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது.

ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.. அந்தவகையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்தது.
தமிழக அரசு: ஆனால், அந்த நிலையை மாற்றி, இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி, போலி பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக பதிவாளர் கருதினால், அந்த பதிவை பதிவாளரே தானாக முன்வந்தோ, அல்லது யாரிடமிருந்து வரப்பெற்ற புகாரின் அடிப்படையிலோ, ஏன் அந்த பத்திர பதிவை ரத்து செய்யக்கூடாது? என்பதற்காக காரணத்தை கேட்டு அறிவிப்பை வெளியிட வேண்டும்.
போலி பத்திரங்கள்: அதுமட்டுமல்ல, அந்த பத்திரத்தை எழுதிக்கொடுத்தவர், பத்திரத்தின் அனைத்து தரப்பினர், தொடர்ச்சி ஆவணம் இருந்தால் அதன் தரப்பினர், பத்திரம் ரத்து செய்யப்பட்டால், அதனால் பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்கு இந்த அறிவிப்பை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இப்படி போலி பத்திரத்தின் மூலம் ஏமாறுவதை தடுக்க அரசின் சார்பிலும் நடவடிக்கை எடுத்த பிறகும்கூட, இந்த மோசடிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது..
எங்கெல்லாம் மோசடி நடக்கிறதோ, அங்கெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் பாய்ந்தபடியே உள்ளன.. கடந்த வாரம்கூட, போலி வாரிசு சான்றிதழ் பெற்று, பத்திரப்பதிவு செய்த வாணியம்பாடி தாசில்தார் உட்பட 13 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.. இப்போதுகூட, ஒரு வித்தியாச சம்பவம் திருப்பரங்குன்றத்தில் நடந்துள்ளது..
வில்லங்க குறிப்பு: அதாவது, ஒரு குறிப்பிட்ட சொத்து தொடர்பாக, மதுரை ஹைகோர்ட் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை, சம்பந்தப்பட்ட சொத்தின் வில்லங்க குறிப்பில் சேர்க்க வேண்டும்.. ஆனால், திருப்பரங்குன்றம் சார் பதிவாளர்
அலுவலகத்தில், நீதிமன்ற உத்தரவை, வில்லங்க குறிப்பில் இணைக்கும்போது, அதை வழங்கிய நீதிபதியின் பெயரையும் சேர்த்து விட்டார்களாம்.. இந்த விவகாரம், சம்பந்தப்பட்ட நீதிபதியின் கவனத்துக்கே சென்றது.
இதையடுத்து, தவறை சரி செய்ய, நீதிபதியும் அனுமதி வழங்கியிருக்கிறார்.. ஆனால், சார் பதிவாளர், உதவியாளர்கள் பயன்படுத்தாமல் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது..
அதிரடி உத்தரவு: இதையடுத்து, திருப்பரங்குன்றம் சார் பதிவாளர் ரமேஷ் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.. போலி சான்றிதழ் என்று மட்டுமேயல்லாமல், பத்திரங்களில் யார் அலட்சியம் காட்டினாலும், அவர்களின் நடவடிக்கை பாயும் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது..!!!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications