வில்லங்க சான்றிதழ்.. "ஸ்டார் 2.0" அப்டேட் ஆகிறது.. கட்டணமே வேணாம்.. பத்திரப்பதிவு துறை அடுத்த அதிரடி
சென்னை: 1975 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்திற்குரிய பதிவேடு ஏற்கனவே கணினிமயமாக்கப்பட்டுள்ள நிலையில், 1950 முதல் 1974 வரையிலான பதிவேடுகளை கணினியில் மேலேற்றம் செய்வதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட காலத்துக்குள் வருமான வரி இணையதளத்தில் உரிய விவரங்களைப் பதிவேற்றம் செய்யாத சார் பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்திருந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு, இது தொடர்பாக பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஒரு செய்திக்குறிப்பையும் வெளியிட்டிருந்தார்.
பான் கார்டு: அதில், "ஒவ்வொரு நிதியாண்டு முடிவடைந்ததும், ரூ.30 லட்சத்துக்கு மேலான விற்பனை ஆவணங்கள், விற்பவர், வாங்குபவர், ஆதார் எண், பான் எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற விவரங்களுடன் பதிவு அலுவலர்களால், வருமான வரித் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் இந்த விவரங்கள் தவறாது பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதுகுறித்து அவ்வப்போது வருமான வரித் துறையால் நினைவூட்டல்கள் செய்யப்படுகின்றன. இவ்வாறு பதிவேற்றம் செய்யத் தேவையான தகவல்களை, ஆவணம் பதிவு செய்ய முன்பதிவு செய்யும் முன்பே, ஆவணதாரர்களிடமிருந்து பெறும் வகையில் பதிவுத் துறையின் ஸ்டார் 2.0 மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனை ஆவணங்கள் பதிவுக்கு வரும் நிலையில், விற்பவர் மற்றும் வாங்குபவரிடமிருந்து பான் எண் பெறப்படுகிறது.
ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதால், பதிவு தொடர்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித் துறைக்கு வழங்கும் வகையில், பதிவுத் துறை மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வருமானவரித்துறை: இந்நிலையில், திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகம், திருவள்ளூர் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு கடந்த 4-ம் தேதி வந்த வருமான வரித் துறையினரிடம், 2017-2018-ம் நிதியாண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் வழங்கப்பட்டன. தேவையான தகவல்களை சரிபார்க்கவும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. இவ்விரு அலுவலகங்கள் குறித்தும் கூடுதல் விவரங்கள், வருமான வரித் துறையினரால், அந்தந்த சார் பதிவாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் விரைவில் வருமான வரித் துறைக்கு அனுப்பப்படும். மேலும், உரிய காலத்துக்குள் விவரங்களை பதிவேற்றம் செய்யாத இந்த இரு அலுவலகங்களின் சார் பதிவாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்டார் 2.0: அனைத்து சார் பதிவாளர்களும் 61-A விவரங்களை வருமான வரித் துறையின் இணையதளத்தில் உரியகாலத்துக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் இன்னொரு செய்திக்குறிப்பினை வெளியிட்டுள்ளார்.
பரிமாணம்: அதில், பதிவுத்துறையில் முன்னோடி திட்டமாக 06.02.2000 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட "ஸ்டார்" திட்டம் 2018 முதல் புதிய பரிணாமத்தில் "ஸ்டார் 2.0" திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பதிவுத்துறையில் அனைத்து சேவைகளும் இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. 1975 ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்திற்குரிய அட்டவணை-II பதிவேடு கணினிமயமாக்கப்பட்டு வில்லங்க சான்றுகளை இணையவழியில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் 2021-2022-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இந்த வசதி, 01.01.1950 முதல் பதியப்பட்ட அனைத்து ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க 01.01.1950 முதல் 31.12.1974 வரையிலான காலத்திற்குரிய வில்லங்கச் சான்றுகளை இணைய வழியில் பொதுமக்கள் பார்வையிடவும் மற்றும் பதிவிறக்கம் செய்ய ஏதுவாகவும் மேற்கண்ட காலத்திற்கான அட்டவணை-II பதிவேட்டினை ரூ.36.58 கோடி மதிப்பீட்டில் கணினியில் மேலேற்றம் செய்வதற்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பதிவுத்துறை: இந்த பணி முடிவடைந்தவுடன் 1950 முதல் இன்றைய நாள் வரையிலான வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் இணையதள வாயிலாக பார்வையிடவும், அதன் பிரதிகளை கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications