வில்லங்க சான்றிதழ்.. கிளம்பியது அடுத்த பிரச்சனை.. வில்லங்க சான்றிதழில் பிழையிருக்கா? அதிரடி உத்தரவு
சென்னை: பத்திரப்பதிவு துறையில் பல்வேறு அதிரடிகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும்நிலையில், பகீர் குற்றச்சாட்டு மீண்டும் கிளம்பி உள்ளது..
பொதுவாக நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புவர்கள் அந்த சொத்தின் முந்தைய ஓனர்கள் குறித்தும், அதில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், வில்லங்க சான்றினை பெறுவார்கள்.

குறிப்பிட்ட அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்று இது.. இதில் அந்த குறிப்பிட்டு சொத்து யார் வசம் இருந்து கைமாறி வந்தது என்ற அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
வில்லங்கம்: அந்த சொத்து பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என சகல விவரங்களும் இதில் உள்ளடங்கி இருக்கும். இதன் மூலம் ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய தினம், அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெறவும் வில்லங்க சான்று தேவையாக இருக்கிறது.. முன்பெல்லாம் இந்த வில்லங்க சான்றினை பெறுவதற்காக, பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டி இருந்தது. ஆனால், இப்போது, ஆன்லைன் மூலமாகவே, வில்லங்க சான்றினை பொதுமக்கள் பெற முடியும்..
வில்லங்க சான்றிதழ்: தமிழ்நாடு பதிவுத்துறை சார்பில் வழங்கப்படும் இந்த சான்றினை, இணைய வழியில் எளிய முறையில் விண்ணப்பித்து, பெற்றுக் கொள்ளலாம். இதற்காக எந்தவித லஞ்சமும் புரோக்கர்கள் உட்பட யாருக்குமே தர வேண்டிய அவசியமில்லை.
மாயமாகும் தகவல்கள்: இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரச்சனை முளைத்தது.. அதாவது, ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணில், 5க்கு மேற்பட்ட உட்பிரிவுகள் பதிவாகும் நிலையில், அதற்கான வில்லங்க சான்றிதழில், சில தகவல்கள் மாயமாகி விடுகிறதாம்.. இந்த தகவல்கள் விடுபடுவதற்கு காரணம் என்ன? என்று தெரியவில்லை.
ஒரு குறிப்பிட்ட நிலம், 8 பாகங்களாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது என்றால், அதில் 5வது உட்பிரிவு வரை, எவ்வித பிரச்னையும் ஏற்படுவதில்லை. இதற்கு மேல் உட்பிரிவுகள் ஏற்படும்போது, அதன் பிரதான சர்வே நம்பரை குறிப்பிட்டு வில்லங்கம் பார்த்தால், 6வது அதற்கு அப்பால் ஏற்பட்ட உட்பிரிவு விபரங்கள் மட்டுமே வருவதாகவும், 5வது வரையிலான உட்பிரிவுகளில் நடந்த பரிமாற்ற தகவல்கள் விடுபடும் நிலை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

பதிவுத்துறை: இதனால் கட்டுமான அனுமதி, வங்கிக்கடன் பெறுவதிலும் பிரச்சனை ஏற்படுவதால், பதிவுத்துறையின், ஸ்டார் 2.0 சாப்ட்வேரில் இதற்கான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பதிவுத்துறை அமைச்சரிடம் புகார் தரப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு புகார் கிளம்பி உள்ளது.. பெரும்பாலான வில்லங்க சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் அதிகமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. எழுத்து பிழைகளை சரி செய்ய கோரும் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டும்கூட, கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அலுவலர்கள் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளதாகவும், இப்படி தாமதப்படுத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
நடவடிக்கை: இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, வில்லங்க சான்றிதழில் பிழைகள் இருந்தால் அதை திருத்த உரிய விண்ணப்பம் பெறப்படும். இதன் அடிப்படையில் சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வரைவு திருத்த விபரங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு செல்லும். அங்கு தான் இந்த பிழைகள் திருத்தப்படும். இது விஷயத்தில் வேண்டுமென்றே தாமதிக்கும் அதிகாரிகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications