அமெரிக்கா எதுக்கு? டாலரை குப்பையில் வீசும் காலம் வந்துவிட்டது! சீன உறவில் நமக்கு இவ்வளவு நன்மைகளா!
சென்னை: யானையும், டிராகனும் சேர்ந்து பயணிக்கும் காலம் வந்துவிட்டதாக சீன அதிபர் கூறியிருக்கிறார். இதன் மூலம் இந்தியாவுடன் வர்த்தக உறவை பலப்படுத்த சீனா ரெடியாக இருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த உறவு இப்படியே மெயின்டெயின் ஆனால், அமெரிக்க டாலரை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உலகம் முழுவதும் பொருட்களை வாங்கவும் விற்கவும் அமெரிக்க டாலர் பயன்படுகிறது. சீனாவும் கூட, டாலரில்தான் நம்முடன் வர்த்தகம் செய்கிறது. ஆனால் இனி சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்யும் சூழல் வரும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். இது சாத்தியமாகும் பட்சத்தில் நம்மால் ஆண்டுக்கு 127.7 பில்லியன் டாலரை சேமிக்க முடியும்.

அந்நிய செலாவணி
இந்த விஷயத்தை புரிந்துக்கொள்ள முதலில் அந்நிய செலாவணி என்றால் என்ன என புரிந்துக்கொள்ள வேண்டும். உலக நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய், கனிமங்கள், தொழில்நுட்ப உபகரணங்கள், மருத்துவ பொருட்கள் என பல வகையான பொருட்களை வாங்குகிறோம். இதற்கு அந்தந்த நாடுகளின் கரன்சியில் பணம் கொடுக்க வேண்டும். பெரும்பாலும் எல்லா நாடுகளும் அமெரிக்க டாலரில் பொருட்களை விற்கின்றன, வாங்குகின்றன. எனவே நாம் அதிக அளவில் டாலரை வைத்திருக்கிறோம்.
1. அமெரிக்க டாலர் (USD): ~58%
2. யூரோ (EUR): ~20%
3. ஜப்பானிய யென் (JPY): ~5%
4. பவுண்டு ஸ்டெர்லிங் (GBP): ~5%
5. சீன ரென்மின்பி (CNY): ~2.5%
என அந்நிய நாட்டு கரன்சியை கையிருப்பு வைத்திருக்கிறோம். இதைத்தான் அந்நிய செலாவணி என்று சொல்வார்கள். அமெரிக்க டாலர் மதிப்பில் நாம் சுமார் 21.9% அளவுக்கு சீனாவுடான வர்த்தகத்தில் செலவு செய்கிறோம்.
சொந்த கரன்சி
ஆனால் தற்போது இந்தியா-சீனா உறவு மேம்பட்டிருப்பதால், இனி சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்யும் சூழல் உருவாக இருக்கிறது. அப்படி செய்தால் அந்நிய செலாவணி டாலரில் 21.9% அளவுக்கு நம்மால் குறைக்க முடியும். பொதுவாக எந்த பொருளுக்கு டிமாண்ட் இல்லையோ அது தானாகவே மதிப்பு குறையும். ஆக டாலரில் 21.9% நமக்கு தேவையில்லையெனில், அதன் மதிப்பு குறையும். மறுபுறம் சொந்த கரன்சியில் வர்த்தகம் என்பதால் இந்திய கரன்சியின் மதிப்பு உயரும்.
இதேபோல இந்தியா-சீனா உறவு இன்னும் பலமாக இருப்பின் விரைவில் பிரிக்ஸ் கரன்சியும் உருவாகும். அப்படி மட்டும் நடந்துவிட்டது எனில், டாலரை தூக்கி குப்பையில் வீசினால் கூட அதை எடுக்க ஆள் இருக்க மாட்டார்கள்.
பிரிக்ஸ் நாடுகள்
தற்போது இந்தியாவின் தேவைகளில் சுமார் 37% அளவுக்கு பிரிக்ஸ் நாடுகள் பூர்த்தி செய்கின்றன. அதிகபட்சமாக 80-90% இந்தியாவின் தேவைகளை இந்த நாடுகளால் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் உலக நாடுகளுடன் பரவலான தொடர்பு வேண்டும் என்பதால் நாம் வீம்புக்கு மற்ற நாடுகளிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்து வருகிறோம். உதாரணத்திற்கு மின்னணு சாதனங்கள் மற்றும் இயந்திரங்களை நாம் அதிக அளவில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம். ஆனால் சீனாவையும் தாண்டி, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்தும் இதை இறக்குமதி செய்கிறோம்.
பிரிக்ஸ் கரன்சி
கனிமங்கள் மற்றும் உலோகங்களை பொறுத்தவரை, பிரிக்ஸ் அமைப்பில் உள்ள பிரேசில், ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவு இறக்குமதி செய்கிறோம். ஆனால் அதையும் தாண்டி ஆஸ்திரேலியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறோம். இனி வரும் காலத்தில் பிரிக்ஸ் கரன்சி உருவாக்கப்பட்டால், அனைத்து தேவைகளையும் பிரிக்ஸ் அமைப்பு மூலமாக நிவர்த்தி செய்துக்கொள்ளலாம். இதற்கு டாலருக்கு பதில் பிரிக்ஸ் கரன்சி பயன்படுத்தப்படும்.
யோசித்து பாருங்கள் நம்முடைய அந்நிய செலாவணியில் சுமார் 80-90 சதவிகிதம், பிரிக்ஸ் கரன்சியில் இருக்கிறது எனில், அப்புறம் டாலருக்கு என்னங்க மதிப்பு? இதெல்லாம்தான் சீனாவுடனான உறவில் நமக்கு கிடைக்கும் நன்மைகள்.












Click it and Unblock the Notifications