முடிவுக்கு வரும் வொர்க் ப்ரம் ஹோம்? ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த டிசிஎஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஐடி நிறுவனம் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முக்கிய உத்தரவை அந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பிறப்பித்துள்ளது. இதனால் ஊழியர்கள் ஷாக்காகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய நிலையில் பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கூறியது. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் அனைத்தும் ‛வொர்க் ப்ரம் ஹோம்' நடைமுறையை பின்பற்ற தொடங்கின.

இதையடுத்து கடந்த 2021ல் கொரோனா பரவல் முடிவடைந்த நிலையில் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை மீண்டும் அலுவலகம் அழைத்து கொண்டன. இருப்பினும் சில நிறுவனங்கள் இன்னும் ‛வொர்க் ப்ரம் ஹோம்' நடைமுறையை பின்பற்றி வருகின்றன.
இந்நிலையில் தான் இந்தியாவின் முதன்மையான உள்ள ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் ‛வொர்க் ப்ரம் ஹோம்' குறித்து ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு என்பது ஊழியர்களின் மெயில்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதாவது டிசிஎஸ் நிறுவனத்தில் வொர்க் ப்ரம் ஹோம் முறை என்பது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் வாரத்தில் 5 நாட்களும் ஊழியர்கள் அலுவலகத்தில் சென்று பணியாற்ற வேண்டும். இந்த முறை என்பது அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. என அந்த மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் டிசிஎஸ் நிறுவனத்தில் கடந்த 2022 செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்கள் வாரம் 3 நாட்கள் அலுவலகம் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. மேலும் 2 நாட்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் வசதி உள்ளது. இத்தகைய சூழலில் தான் வரும் 1ம் தேதி முதல் ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்களும் அலுவலகத்தில் பணி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கூட ‛வொர்க் ப்ரம் ஹோம்' செய்யவும் சிலருக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக இதுபற்றி டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை எச்ஆர் அதிகாரியான (Chief Human Resources Officer) மிலிந்த் லக்காட் கூறுகையில், ‛‛வீட்டில் இருந்து வேலை செய்வது என்பது அனைவருக்கும் மிகவும் வசதியான ஒரு வாய்ப்பாகும்.
ஆனால் சில குறைபாடுகள் இருந்தன. நிறுவனத்தில் இருந்து வேலை செய்யும்போது பணியாளர்கள் திறம்பட வேலை செய்யலாம். அதோடு புதிதாக பணியில் சேர்வோருக்கு அனுபவசாலிகளால் வழிக்காட்ட முடியும்'' என சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் தான் தற்பாது டிசிஎஸ் நிறுவனம் ‛வொர்க் ப்ரம் ஹோம்' வாய்ப்பை முடித்து கொள்ளும் ஊழியர்களுக்கு இ-மெயில் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் WFH தங்கள் லேப்டாப், மேஜையை எந்தத் திசையில் வைக்க வேண்டும்? -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications