ஈசிஆர் ரோட்டில் யாருங்க? சென்னையின் 10 இடத்தில் ரெயிடு.. ஆபீசர்களுக்கு போன "மெசேஜ்".. யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால், மிகப்பெரிய பரபரப்பு காலை நேரத்திலேயே ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், சமீப காலமாகவே, அமலாக்கத்துறை அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் நிறைய சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்..

முக்கியமாக, தமிழக அமைச்சர்கள், மணல் குவாரி உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்களில் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொருமுறை ரெய்டுகளின்போதும், முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி வருகிறார்கள்.. இது தொடர்பான விசாரணையையும் நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் பெற்று வருகிறார்கள்,

Enforcement department raided in ECR RA puram including 10 places in Chennai what happened

என்ன காரணம்: கடந்த வாரம்கூட, சென்னையின் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்... கட்டுமானம் மற்றும் கெமிக்கல் நிறுவன அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடைபெற்றது..

முக்கியமாக, சென்னை கோட்டூர்புரத்தில் விஷ்ணு என்பவரின் வீட்டிலும், அண்ணா நகரில் சுப்பிரமணியம் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.. அதுபோலவே, தி.நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.

சென்னை: இந்நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் பிரதான இடங்களில் காலையிலேயே அதிகாரிகள் சோதனையை துவங்கியிருக்கிறார்கள்.. சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்..

அதாவது, சென்னையில் சில கட்டுமான நிறுவனங்களில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடப்பதாக அமலாக்கத்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதன் அடிப்படையில், சென்னையில் ஆர்ஏ புரம், ஈசிஆர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு: சோதனை நடக்கும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திடீரென ஒரே நேரத்தில் சென்னையின் பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+