திடீர் பரபரப்பு.. இந்தியா சிமெண்ட்ஸ் அலுவலகத்தில் அமலாக்க துறை ரெய்டு.. பின்னணி என்ன
சென்னை: இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அந்நிறுவனம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களில் ஒன்று இந்தியா சிமெண்ட்ஸ். இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ஶ்ரீநிவாசன். ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக இருக்கும் சிஎஸ்கே நிறுவனம் இந்த க்ரூப்பிற்கு சொந்தமானதாகவே இருக்கிறது.

இந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வந்த நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாகச் சோதனை நடத்தினர்.
கடந்த புதன்கிழமை ஜனவரி 31ஆம் தேதி இந்த ரெய்டு தொடங்கிய நிலையில், இந்த சோதனை நேற்று (பிப்ரவரி 1) வியாழக்கிழமை முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA), 1999-ன் விதிகளின் கீழ் முறைகேடுகள் இருப்பதாகப் புகார் எழுந்ததால் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ரெய்டு குறித்த தகவல் வந்ததும் பங்குச்சந்தையில் இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகள் கடுமையாகச் சரிந்தது. ஒரே நாளில் அதன் பங்குகள் விலை ரூ.20 வரை குறைந்தது. இதற்கிடையே இந்த சோதனை தொடர்பாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது.
அதில் அமலாக்கத் துறை கோரிய அனைத்து விளக்கங்கள் மற்றும் ஆவணங்களையும் வழங்கியதாகவும்,, இந்த விசாரணையால் நிறுவனத்தின் மீது எந்தவொரு நடவடிக்கையும் இருக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications