அடுத்த ரவுண்டுக்கு ரெடியான அமலாக்கத்துறை.. அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன்.. பெரிய சிக்கல்?
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாரில், நேரில் ஆஜராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு, விடிய விடிய விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில், அமைச்சராக இருந்தபோது, முறைகேடாக வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினரால் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான கல்வி நிலையங்கள் என பல இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சரின் வீட்டு வாசலில் இருந்த கார்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். துணை ராணுவப்படையினர் சோதனை நடைபெற்ற இடங்களில் குவிக்கப்பட்டனர். வங்கி அதிகாரிகள் அழைத்து வரப்பட்டு, அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரவு செலவு சரிபார்க்கப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் நடந்த 13 மணி நேர சோதனையை தொடர்ந்து, வாக்குமூலம் பெறுவதற்காக அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 7 மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சர் பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது. அதைதொடர்ந்து, அதிகாலை 3 மணியளவில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து அனுப்பப்பட்டார். மீண்டும் அடுத்த நாள் மாலையில் விசாரணைக்கு ஆஜரானார் பொன்முடி. அதேபோல, அவரது மகன் கவுதம சிகாமணியிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை, குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நவம்பர் 30ஆம் தேதி அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 2006 முதல் 2011 வரை கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார் அமைச்சர் பொன்முடி. அப்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இந்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் தான் அமைச்சர் பொன்முடியும் அவரின் மகன் கெளதம சிகாமணியும் அமலாக்கத்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மணல் குவாரி உரிமையாளர்கள், அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், போலி பில்களை வைத்து கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, 10 மாவட்ட ஆட்சியர்கள், கனிமவளத்துறை அதிகாரிகள் என பலருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் 4 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் அமைச்சர் பொன்முடி, அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய திமுக புள்ளிகளை குறிவைத்து மத்திய அரசின் அமலாக்கத்துறை அடுத்த ரவுண்டு ஆட்டத்தை தொடங்கியிருப்பதாக, திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications