போதைப் பொருள் கடத்தல்.. சட்டவிரோத பணப் பரிமாற்றம்! அமலாக்கத்துறை வசம் ஜாபர் சாதிக் சகோதரர் சலீம்
சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி தற்போது சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான திமுக முன்னாள் பிரமுகரும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் கைதாகி சிறையில் உள்ளார். இந்நிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் மிகப்பெரிய அளவில் போதை பொருட்கள் பிடிபட்டது. மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் போதை பொருட்கள் பிடிபட்டதாகக் கூறப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் மெத்தபட்டமைன் மற்றும் சூடோபெட்ரொம் ஆகிய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக யூகங்கள் கிளம்பின. இந்நிலையில் கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவரும், பிரபல தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். மேலும், சட்டவிரோத பணப் பறிமாற்ற வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது போதை பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் சுமார் 21 கோடியை சில முக்கிய பிரமுகர்களுக்கு ஜாஃபர் சாதிக் கொடுத்திருக்கிறார் என கூறப்பட்டது. இதற்கிடையே போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் சாதிக் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் சிறையில் உள்ளார். அவரது நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 15 நாட்கள் அமலாக்கதுறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 7 நாட்கள் அமலாகத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 15 நாட்கள் அமலாக்கதுறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, முகமது சலீமை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து நேரில் ஆஜர்படுத்தினர். அப்போது முகமது சலீமிடம் அமலாக்கதுறை காவலில் தங்களை எடுக்க மனு தாக்கல் செய்துள்ளார்கள் இதற்கு ஏதேனும் ஆட்சேபணம் தெரிவிக்கிறீர்களா என்று நீதிபதி கேட்டார்.
அதற்கு பதிலளித்த முகமது சலீம் தனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றும் நாளை எனது குழந்தையின் பிறந்தநாள் என்பதால் அவர்களை பார்க்க அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதை அடுத்து முகமது சலீமை 7 நாட்கள் அமலாக்க காவலில் எடுக்க உத்தரவிட்ட நீதிபதி நாளை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை அவரது குழந்தையை காண அனுமதிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications