இதுக்கு சட்டத்திலேயே இடமில்லையே.. செந்தில் பாலாஜிக்கு பெரிய செக் வைத்த அமலாக்கத்துறை.. ஆடிய கோர்ட்
சென்னை: செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கனவே பெயில் மனு தாக்கல் செய்யப்பட்ட பின் அவர்கள் எப்படி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும் என்று அமலாக்கத்துறை கேள்வி எழுப்பி உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி மனைவி சார்பாக வழக்கறிகர் என். ஆர். இளங்கோ ஆஜராகி வாதம் வைக்கிறார்.

அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் வைக்கிறார். அதில், ரிமாண்ட் உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. மாறாகஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இப்படி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட பின் மனுதாரர் ஹேபியஸ் கார்பஸ் மனுவை எப்படி போட முடியும். ஒரு நீதிபதி ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் கொடுத்துவிட்டார்.
நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனு கேட்டு இவர்கள் மனு தாக்கல் செய்துவிட்டனர். மனுதாரர் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது, அவர் காவலை ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தம். அவர் காவலை ஏற்றுக்கொண்ட நிலையில் எப்படி இப்போது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும். அதற்கான முகாந்திரம் எங்கே உள்ளது.காவலில் வைத்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோர முடியாது என்பதால் விசார்ணை நீதிமன்றத்தை அதிகாரிகள் நாடினர். மருத்துவமனை மாற்றம் தொடர்பாக இடைக்கால உத்தரவை நாங்கள் பிறப்பித்தபோது ஏன் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென கேட்கவில்லை
கைது செய்து ஆஜர்படுத்திய நீதிமன்றத்தில் தான் முதலில் கேட்க முடியும். அதனால் அங்கு கேட்டோம், 8 நாட்கள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி விசாரிக்க முடியவில்லைகாவலில் வைத்து விசாரிக்க அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிப்பது இயலாத காரியம் என்பதால் அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தை நாடியது.
சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய உத்தரவில் அவர் நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்படும். முதல் 15 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க கோர முடியும். அந்த அடிபடையில் காவலில் வைத்து விசாரிக்க கோரினோம். இல்லாவிட்டால் அமலாக்கப் பிரிவு தனது கடமையை செய்ய தவறியதாகி விடும்.
உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டார்.
கைது செய்த 10 மணி நேரத்துக்குள் கைது குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது; கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது; ஆனால் செந்தில் பாலாஜி அதைப் பெற மறுத்து விட்டார். கைது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதற்கும், கைதுக்கான காரணங்களை தெரிவித்த ஆவணத்தை செந்தில் பாலாஜிப்பெற மறுத்ததற்கான ஆதாரங்களும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. கைதின் போது செந்தில் பாலாஜிக்கு சட்ட உதவிகள் கிடைத்தன. அப்போது மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ உடனிருந்தார், என்று வாதம் வைத்துள்ளார்.
-
கிளைமேட்டே டக்னு மாறிடுச்சே.. சோனியா, அமித் ஷா யாரையுமே விஜய் சந்திக்கல.. இதுதான் விஷயமா? -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
காலையிலேயே படையெடுத்த அமலாக்கத்துறை.. திக்குமுக்காடிய பினராயி விஜயன்.. கேரளாவை அதிரவைத்த ரெய்டு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications