மாறியது ஒன்று தான்.. ஜாமீனில் விட்டால் செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைப்பார்: அமலாக்கத்துறை பரபர வாதம்
சென்னை: செந்தில் பாலாஜி முன்பு தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கும், தற்போதுள்ள மனுவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அவர் அமைச்சர் பதவியை மட்டுமே ராஜினாமா செய்துள்ளார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைப்பார் என அமலாக்கத்துறை பரபர வாதங்களை முன்வைத்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் பரபர வாதங்களை முன்வைத்தார்.

அமலாக்கத்துறை இன்று வைத்த வாதம்: இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதங்களை முன்வைத்தார். செந்தில் பாலாஜி முன்பு தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கும், தற்போதுள்ள மனுவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அவர் அமைச்சர் பதவியை மட்டுமே ராஜினாமா செய்துள்ளார். சண்முகம், அவரது சகோதரர் அசோக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர் என அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அதுவும் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறுவதற்கு ஒரு நாள் முன் தான் செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் இன்னமும் அவர் செல்வாக்கான நபராகவே உள்ளார். ஏற்கனவே பணம் கொடுத்தவர்களிடம் செந்தில் பாலாஜி சமரசம் செய்திருக்கிறார். வழக்கில் சாட்சிகள் இன்னும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்க கூடும். 30 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்ப எந்த காரணமும் இல்லை.
சாட்சிகளை கலைப்பார்: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் இன்னும் சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியதாக உள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைப்பார். குற்றப்பிரிவு விசாரணையை முடித்துவிட்டது. ஆனால், நாங்கள் குறிப்பிட்ட ஆவணங்களின் நகல்களை கேட்டபோது, அதை தரவில்லை என்றும் அமலாக்கத்துறை வாதம் வைத்துள்ளது.
மேலும், வழக்கில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை. அவை 2020ல் பெறப்பட்டு, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அமலாக்கத்துறை எந்த ஆதாரத்தையும் உருவாக்கவும் இல்லை; திருத்தவும் இல்லை. மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கு ஆவணங்களை மட்டுமே நம்பியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு பென் டிரைவ் ஆவணத்தின் தேதி மாறியதால், எல்லா ஆவணங்களும் ஏற்கதக்கதல்ல என்றாகிவிடாது. உதாரணத்திற்கு ஒரு புத்தகத்தை கைப்பற்றுகிறோம். அதில் ஒரு பக்கத்தில் ஒருவரின் கையெழுத்தும், இன்னொரு பக்கத்தில் வேறு ஒருவர் கையெழுத்தும் உள்ளது. அதனால் அது ஏற்கப்படாதா என அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியது.
முகாந்திரம் இருந்தாலே அவர் குற்றவாளி: தொடர்ந்து, செந்தில் பாலாஜி 67.75 கோடிக்கு மோசடி செய்துள்ளார். அதில் 1.34 கோடிக்கு தான் கணக்கு உள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டப்படி சட்டப்படி குற்றத்திற்கான முகாந்திரம் இருந்தாலே, அவர் குற்றவாளி ஆகிவிடுவார். நாங்கள் நீதிமன்ற விசாரணைக்கு தயாராக உள்ளோம், ஆனால் அவர்கள் தயாராக இல்லை என அமலாக்கத்துறை வாதங்களை அடுக்கியது.
ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை வாதங்கள் இன்று நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் இதற்கு பதில் வாதம் வைப்பதற்காக வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில், அமலாக்கத்துறையின் இன்றைய வாதங்களுக்கு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் பதில் வாதங்களை வைப்பார்.
நேற்று செந்தில் பாலாஜி தரப்பு வைத்த வாதம்: இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதாலும், சாட்சிகள் அச்சுறுத்தப்படலாம் என்பதாலும், ஜாமீன் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என்பதாலும், சந்தர்ப்ப சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் கூறி, ஜாமீன் மறுக்கப்பட்டது. தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எனவே, அமலாக்கத்துறையின் வாதம் செல்லாததாகிவிட்டது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினார் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம்.
அதோடு, அமலாக்கத்துறையின் மொத்த வழக்கும், சோதனையின்போது பறிமுதல் செய்த பென் டிரைவ் மற்றும் ஹார்டு டிஸ்க் அடிப்படையிலேயே உள்ளது. சோதனையின்போது ஐந்து மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்த நிலையில், நீதிமன்றத்தில் வேறு மின்னணு சாதனங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பறிமுதலுக்குப் பின், அந்த மின்னணு சாதனங்களில் 67 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோதனைக்குப் பின் பென் டிரைவ் குறித்த அறிக்கையில், 284 கோப்புகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
பின்னர் அந்த பென் டிரைவ் குறித்த மற்றொரு அறிக்கையில், 472 கோப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்களுக்கு என்ன மதிப்பு உள்ளது, ஆதாரங்கள் திருத்தம் தொடர்பாக தற்போது நிரூபிக்க முடியாத நிலையில், விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டுமா பறிமுதலுக்குப் பின் பென் டிரைவ், ஹார்டு டிஸ்க்கில் இருந்த கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. புதிய கோப்புகள் அதில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது என்றும் வாதிட்டார்.
-
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை? அவசர முறையீட்டில் ஐகோர்ட் தலைமை நீதிபதி கேட்ட கேள்வி! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications