அமலாக்கத்துறைக்கு விக்கல் வர வைத்த செந்தில் பாலாஜி தரப்பு.. இளங்கோ வாதத்தால் பரபரப்பு.. போச்சே!
சென்னை: செந்தில் பாலாஜிக்கு எதிராக பொய்யான ஆதாரங்களை, ஆவணங்களை உருவாக்குவது என்பது மிகப்பெரிய சட்ட விரோதம் என்று அவரின் மனைவி தரப்பு வழக்கறிஞர் என். ஆர் இளங்கோ இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி மனைவி சார்பாக வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ ஆஜராகி வாதம் வைக்கிறார்.
அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் வைக்கிறார். வேலை வாய்ப்பு மோசடியில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது. அவர் அவ்வளவு பெரிய பண வைப்புத்தொகையை பெற்றது எப்படி என்பதை நிரூபிக்கவில்லை. அவரது உண்மையான வருமானத்தில் இருந்துதான் அந்த பணம் வந்தது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. அதனால் கைது நியாயம் ஆனதே.
கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது, அந்த காரணங்கள் அவருக்கு வாசிக்கப்பட்டன, ஆனால் அவர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட மறுத்துவிட்டார். எனவே, இரண்டு சுயேச்சை சாட்சிகள் முன்னிலையில் கைது உத்தரவு/மெமோ நிறைவேற்றப்பட்டது, என்று கூறியது.
இதையடுத்து என். ஆர் இளங்கோ வைத்த வாதத்தில், நீதிமன்ற காவலில் வைக்கும் போது இதையெல்லாம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. கைதுக்கான காரணங்களை தெரிவித்து தயாரிக்கப்பட்ட மெமோவில் செந்தில் பாலாஜி கையெழுத்திட மறுத்தார் என்பது குறித்து எந்த பதிவு இல்லை என்று கூறினார்.
இதற்கு அமலாக்கத்துறை வைத்த பதில் வாதத்தில், கைது குறித்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குக்கு தகவல் தெரிவித்ததாக மொபைல் ஸ்கிரீன் ஷாட் இணைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு கூறுகிறது. இதுசம்பந்தமாக காலை 8:12 மணிக்கு தான் அனுப்பப்பட்டுள்ளது.
கைது மொமோவோ, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி, ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. கைதுக்குப் பின் அதற்கான காரணங்களை தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது கைது செய்யும் போது அதற்கான காரணங்களை கூற வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை.

நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை. ஆட்கொணர்வு வழக்கு தொடர முடியாது. நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பிக்கும் முன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதால், சட்டவிரோத கைது என கூற முடியாது.
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் உள்ளாரே தவிர அமலாக்கத் துறை காவலில் இல்லை. அதனால் அவரை ஆஜர்படுத்தி, விடுவிக்கும்படி கோர முடியாது. ஜூன் 14 அதிகாலை 1:39 கைது; நீதிமன்ற காவலில் வைக்க கோரிய மனு 24 மணி நேரத்துக்குள் தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி, ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. கைதுக்குப் பின் அதற்கான காரணங்களை தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது.
கைது செய்யும் போது அதற்கான காரணங்களை கூற வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை. நீதிமன்ற காவலில் வைக்க ஆஜர்படுத்தும் போது தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர அமலாக்கத் துறைக்கு உரிமை உள்ளது. அதை நீதிமன்றமும் பரிசீலிக்கலாம். உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டார். கைது செய்த 10 மணி நேரத்துக்குள் கைது குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது; கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது; ஆனால் செந்தில் பாலாஜி அதைப் பெற மறுத்து விட்டார். கைது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதற்கும், கைதுக்கான காரணங்களை தெரிவித்த ஆவணத்தை செந்தில் பாலாஜிப்பெற மறுத்ததற்கான ஆதாரங்களும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன, கைதின் போது செந்தில் பாலாஜிக்கு சட்ட உதவிகள் கிடைத்தன. அப்போது மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ உடனிருந்தார் என்று அமலாக்கத்துறை வாதம் வைத்துள்ளது.
இதை எதிர்த்து என். ஆர் இளங்கோ வைத்த வாதத்தில், சட்ட விரோத பணமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவே முடியாதே. சட்டத்திலேயே அதற்கு இடம் இல்லையே. பின்னர் எப்படி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க முடியும். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இதை பல முறை தெளிவுபடுத்தி உள்ளது.
அப்படி இருக்க இவர்கள் எதை வைத்து கஸ்டடி கேட்டனர். இந்த கைதில் சட்ட விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. சுங்கத்துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு சட்ட விரோத பணமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால் இந்த பிரிவில் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவே முடியாதே.
ஆகவே இது சட்ட விரோதமான கைதுதான். 41 ஏ படி கைது செய்தால் கைது செய்யப்பட்ட நபரிடமும் குடும்பத்தினரிடமும் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். இவர்களுக்கு கைது செய்யவே உரிமை இல்லாத போது,. அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்று என். ஆர் இளங்கோ வாதம் வைத்துள்ளார்.
இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி சக்கரவர்த்தி, CrPCயின் 41A பிரிவைப் பின்பற்றி மட்டும்தான் கைது செய்ய வேண்டுமா அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான காரணங்கள் இருப்பதாக அதிகாரி திருப்தி அடைந்தால், கைது செய்வதற்கு முன் சம்மன் அனுப்பாமல் கைது செய்யலாமா என்று கேட்டார்.
இதற்கு என். ஆர் இளங்கோ கூறிய பதிலில் தற்போதைய வழக்கில், கைது செய்வதற்கான முழுமையான காரணங்களை ED கூறவில்லை. கைது செய்வதற்கு முன் அமலாக்கத்துறை கண்டிப்பாக பிரிவு 41A ஐ பின்பற்ற வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதி "ஆம், சரிதான்" என்றார்.
இதையடுத்து ஆட்கொணர்வு மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் போது, காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை ஏன் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமலாக்கத்துறை, காவலில் வைத்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோர முடியாது என்பதால் விசார்ணை நீதிமன்றத்தை அதிகாரிகள் நாடினர்.
கைது செய்து ஆஜர்படுத்திய நீதிமன்றத்தில் தான் முதலில் கேட்க முடியும். அதனால் அங்கு கேட்டோம், 8 நாட்கள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி விசாரிக்க முடியவில்லை .காவலில் வைத்து விசாரிக்க அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிப்பது இயலாத காரியம் என்பதால் அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தை நாடியது .
சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய உத்தரவில் அவர் நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்படும்.
முதல் 15 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க கோர முடியும். அந்த அடிபடையில் காவலில் வைத்து விசாரிக்க கோரினோம். இல்லாவிட்டால் அமலாக்கப் பிரிவு தனது கடமையை செய்ய தவறியதாகி விடும் என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது. மேலும் , கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது, அந்த காரணங்கள் அவருக்கு வாசிக்கப்பட்டன, ஆனால் அவர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட மறுத்துவிட்டார். எனவே, இரண்டு சுயேச்சை சாட்சிகள் முன்னிலையில் கைது உத்தரவு/மெமோ நிறைவேற்றப்பட்டது, என்று கூறியது.
இதற்கு என் ஆர். இளங்கோ அளித்த பதிலில், செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமலாக்கத்துறை ஆவணத்தில், 13 பாராக்கள் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் 14வது பாரா கையால் எழுதப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டதை அமைச்சரின் சகோதரர் அசோக்கிற்கு தெரிவித்தோம் என்பதை மட்டும் கடைசியில் கையில் எழுதி உள்ளனர். இது குழப்பமாக உள்ளது.
இதை ஏன் அவர்கள் முன்கூட்டியே டைப் செய்யவில்லை. அமைச்சர் மெமோவை பெற மறுத்ததையோ அல்லது கையெழுத்திடுவதையோ ஏன் பதிவு செய்யவில்லை? ஜூன் 14 அன்று காலை 8:12 மணிக்கு அமைச்சரின் சகோதரர், மனைவி மற்றும் பட்டயக் கணக்காளர் ஆகியோருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக அமலாக்கத்துறை கூறுகிறது, ஆனால் அதற்கு முன் இரவே 1:41 மணிக்கு தயாரிக்கப்பட்ட கைது குறிப்பில் இந்த விஷயத்தை இவர்கள் எப்படி எழுதினர்? இது எப்படி சாத்தியமாகும்? என்று கேள்வி எழுப்பினார். ஆதாரங்களை மாற்றுவது என்பது சட்ட விரோதம். முக்கியமாக பொய்யான ஆதாரங்களை உருவாக்குவது என்பது மிகப்பெரிய சட்ட விரோதம், என்றும் அவர் கூறினார்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications