ஸ்டாலின் குடும்பத்தை குறி வைப்பதே.. அமலாக்கத்துறையின் மிகப்பெரிய பிளான்.. திருச்சி சூர்யா திடுக்!
சென்னை: திமுக பதறிக்கொண்டு டெல்லிக்கு செல்ல காரணம். இப்போது இருக்கும் போக்கிலேயே சென்றால்.. திமுக மீண்டும் வெல்லும். திமுக நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டது. இதனால் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள். இதை மாற்றவே ஸ்டாலின் குடும்பத்தை கைது செய்ய.. பல அமைச்சர்களை கைது செய்ய.. எல்லா அமைச்சர்களையும் லாக் செய்ய கூட டெல்லி தயாராக இருக்கிறது., என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். இரண்டு நாட்களாக அங்கே ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி சூர்யா பேட்டி
திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்தை கைது செய்தனர். தெலுங்கானாவில் சந்திசேகர ராவ் குடும்பத்தை காய் வைத்தனர். அதே பார்முலாவை இங்கே கொண்டு வருகின்றனர். டாஸ்மாக்தான் வருமானம் தரக்கூடிய துறை. இங்கே மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான். டாஸ்மாக் ஊழலை பொறுத்தவரை ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்கிறார்கள்.
ஆனால் அவர்கள் கண்டுபிடித்து இருப்பது 50 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல். அதனால் இதை பெரிதாக்க பார்க்கிறார்கள். அமலாக்கத்துறை இப்போது குறைத்து சொன்னாலும் வழக்கில் போக போக விசாரணையை தீவிரமாக்குவார்கள். பல விஷயங்களை ஆலோசனை செய்கிறார்கள். டாஸ்மாக் முறைகேடு பற்றி தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்கிறார்கள். எத்தனை ஹாலோகிராம் அடிக்கிறார்கள் என்பது பற்றியும் கூட விசாரணைகளை செய்து வருகிறார்கள்.
இதில் பல கோடி முதலமைச்சர் குடும்பத்திற்கு சென்றுள்ளது. திமுக பதறிக்கொண்டு டெல்லிக்கு செல்ல காரணம். இப்போது இருக்கும் போக்கிலேயே சென்றால்.. திமுக மீண்டும் வெல்லும். திமுக நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டது. இதனால் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள். இதை மாற்றவே ஸ்டாலின் குடும்பத்தை கைது செய்ய.. பல அமைச்சர்களை கைது செய்ய.. எல்லா அமைச்சர்களையும் லாக் செய்ய கூட டெல்லி தயாராக இருக்கிறது. இதுதான் டெல்லியின் பிளான்.
முதலமைச்சரின் முதன்மை குடும்பத்தை கை வைப்பார்கள். ஆனால் செந்தில் பாலாஜியை கைவைக்க மாட்டார்கள். இதுதான் நடக்க போகிறது பாருங்கள், என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications