Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விசாரணைக்கு இடையே.. அமலாக்கத்துறை எடுத்து காட்டிய நியூஸ்.. ஷாக்கான செந்தில் பாலாஜி.. போச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்யப்படும் விசாரணைக்கு இடையே அமலாக்கத்துறை அவரிடம் சில அதிர்ச்சி தரும் தகவல்களை இடை இடையே தெரிவித்து வருகிறதாம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறார். கடந்த 3 நாட்கள் விசாரணை முடிந்துவிட்டது. இன்னும் 2 நாள் விசாரணை மீதம் இருக்கிறது. இன்று 4வது நாள் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது.

Enforcement Directorate informs its action against new home to Minister Senthil Balaji

பெரும் போராட்டத்திற்கு பின் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்துள்ளது. முதலில் இவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அதன்பின் 8 நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடி கொடுக்கப்பட்டது.

ஆனால் அப்படி கஸ்டடி கொடுத்தும் கூட அமலாக்கத்துறை இவரை கஸ்டடி எடுக்காமல், உடல்நிலையை காரணம் காட்டி, விசாரிக்காமல் விட்டது. அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் போராடி அமலாக்கத்துறை 5 நாட்கள் கஸ்டடியை பெற்றுள்ளது.

ஷாக் கொடுக்கிறது: இந்த நிலையில் நேற்று முதல்நாள் விசாரணைக்கு இடையே செந்தில் பாலாஜியிடம்.. உங்களுக்கு சொந்தமான முக்கிய சொத்துக்களை முடக்கி உள்ளோம். முக்கியமாக உங்கள் தம்பி அசோக்கின் மனைவி கட்டி வரும் வீட்டை சீல் வைத்து உள்ளோம்.

இதன் கட்டுமானத்தை முடக்கி உள்ளோம் என்று கூறி உள்ளனர். செந்தில் பாலாஜியிடம் விசாரணை செய்வதற்கு இடையில் இந்த அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளனர். ஆனால் செந்தில் பாலாஜி இதை கேட்டுவிட்டு.. அது என்னுடைய வீடே கிடையாது. அதற்கும் எனக்கும் தொடர்பே இல்லையே.

அதை முடக்குவதால் என்ன பயன் இருக்க முடியும். அந்த வீடு நான் முறைகேடு செய்ததால் வாங்கப்பட்டதாக உங்களால் சொல்ல முடியுமா என்று பதில் கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.

ஆவணங்கள்; விசாரணை தற்போது புதிய உச்சத்தை தொட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை விசாரணையில் பல ஆவணங்களை காட்டி அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது. அதன்படி செந்தில் பாலாஜியிடம் இந்து சொத்துக்கள் எல்லாம் உங்களுடையதா என்று கேட்டுள்ளனர்.

சில ஆவணங்களை காட்டி செந்தில் பாலாஜியிடம் இதை கேட்டுள்ளனர். அதற்கு அவை என்னுடையது இல்லை என்று உள்ளார். உங்கள் தம்பியுடையதா என்று கேட்டுள்ளனர். அதற்கும் என்னுடையது இல்லை என்று சொல்லி உள்ளார்.

இறுதிக்கட்டம்: தற்போது விசாரணையின் கடைசி கட்டத்தில் செந்தில் பாலாஜி இருக்கிறார். நாளை இரவு 12 மணிக்கு முன் செந்தில் பாலாஜி மீண்டும் சிறையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். அது வரை செந்தில் பாலாஜி விசாரணை செய்யப்படுவார்.

இதனால் முடிந்த அளவு செந்தில் பாலாஜியிடம் இப்போதே தகவல்களை கறக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாம். அவரிடம் கேள்விகளை அதிகரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாம். ஒருவேளை கோர்ட் அனுமதித்தால் செந்தில் பாலாஜியின் கஸ்டடி நீட்டிக்கப்படும்.

கேள்விகள்: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

Enforcement Directorate informs its action against new home to Minister Senthil Balaji

இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அவரை கைது செய்தனர். இதனால் அது தொடர்பாகள் செந்தில் பாலாஜியிடம் கேள்விகளை கேட்டுள்ளனர்.

சுற்றிய அதிகாரிகள்: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்தது உண்மையா? அதில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா? போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது.இதில் முதலீடுகள் மறைக்கப்பட்டு இருந்தால் அதற்கு உடந்தையாக இருந்தது யாரெல்லாம்?

இதில் பெறப்பட்ட பணம் வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதா? செந்தில் பாலாஜி தம்பி அசோக்கிற்கு இதில் தொடர்பு உள்ளதா? எந்தெந்த நிறுவனங்களில் இந்த பணம் முதலீடு செய்யப்பட்டது, போன்ற கேள்விகளை செந்தில் பாலாஜியிடம் கேட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+