சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பின்வாசல் வழியாக.. நைசாக வாடகை காரில் வெளியேறிய சங்கர்.. கேள்வி கேட்ட அமலாக்கத்துறை.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

சென்னை: பிரபல இயக்குனர் சங்கர் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேற்று மாலை ஆஜர் ஆனார். இந்த நிலையில் விசாரணை முடிந்து அவர் பின்வாசல் வழியாக வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் சங்கருக்கு அமலாக்கத்துறை சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன் சம்மன் அனுப்பப்பட்டது. சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக இவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இவருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

மைக் தூக்கி எறிந்த நிகழ்வு.. பார்த்திபன் போன் செய்தார்.. கண் கலங்கினேன்.. நடந்தது என்ன? ரோபோ சங்கர் மைக் தூக்கி எறிந்த நிகழ்வு.. பார்த்திபன் போன் செய்தார்.. கண் கலங்கினேன்.. நடந்தது என்ன? ரோபோ சங்கர்

 வழக்கு என்ன?

வழக்கு என்ன?

ஆனால் இது என்ன வழக்கு என்பது இன்னும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. என்ன விதமான பண பரிமாற்ற புகார். யார் கொடுத்தது என்பது போன்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. விசாரணை முடிந்த பின்பே முழு விவரங்களை வெளியிடுவோம் என்று அமலாக்கத்துறை தரப்புதெரிவித்துள்ளது . நேற்று ஆஜரான சங்கரிடம் 3 மணி நேரம் விசாரிக்கப்பட்டது. அவரிடம் இதில் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

விசாரணை

விசாரணை

இந்த விசாரணைக்கு சங்கர் தனது இன்னோவா காரில் வந்து இருந்தார். அமலாக்கத்துறை துணை இயக்குனர் மல்லிகா அர்ஜுனாதான் சங்கரை விசாரித்தார். இந்த விசாரணையின் போது சங்கரின் வழக்கறிஞர் உடன் இருந்தார். அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு சங்கரின் வழக்கறிஞர்தான் அதிகமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த விசாரணை விவரம் தெரிவித்து செய்தியாளர்கள் அங்கே கூடினார்கள்.

சங்கர் கார்

சங்கர் கார்

அமலாக்கத்துறை அலுவலக வாசலில் செய்தியாளர்கள் வரிசையாக கூடினார்கள். வெளியே சங்கர் வரும் போது அவரிடம் பேட்டி எடுக்க அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் சங்கர் இந்த விஷயம் தெரிந்து பின் வாசல் வழியாக வெளியேறினார். அவரின் கார் அங்கேயே இருந்தது. மாறாக சங்கர் சார்பில் வாடகை கார் புக் செய்யப்பட்டது. அந்த கார் பின் பக்க வாசலுக்கு வரவழைக்கப்பட்டது.

பின்வாசல் வழியாக வெளியேற்றம்

பின்வாசல் வழியாக வெளியேற்றம்

அங்கிருந்து அவர் வெளியேறிய பின் டிரைவர் சங்கர் காரை எடுத்துக்கொண்டு வெளியேறினார். சங்கர் திடீரென இப்படி பின்வாசல் வழியாக காரை எடுத்துக்கொண்டு சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் செய்தியாளர்களை சந்திக்க விரும்பாமல் இப்படி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது என்ன வழக்கு என்பது இன்னும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. விரைவில் அமலாக்கத்துறை இது தொடர்பான விவரங்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Enforcement Directorate investigates Shankar: The director leaves the office in cab. பிரபல இயக்குனர் சங்கர் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேற்று மாலை ஆஜர் ஆனார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X