அமலாக்கத்துறை ஒன்னும் சூப்பர் போலீஸ் இல்லை.. எல்லாவற்றையும் விசாரிப்பீங்களா? சென்னை ஹைகோர்ட் காட்டம்
சென்னை: எதைப் பற்றி வேண்டும் என்றாலும் புலன் விசாரணை செய்வதற்கு அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் கிடையாது என சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ஒரு குற்றச் செயல் நடந்து இருந்தால் தான், அது குறித்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், குற்றமே நடக்காத நிலையில், அமலாக்கத்துறையால் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.
சென்னையை சேர்ந்த நிறுவனம் ஆர்.கே.எம்.பவர்ஜென். இந்த நிறுவனமானது கடந்த 2015 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி சுரங்க ஓதுக்கீட்டை பெற்று இருந்தது. அப்போது இந்த நிலமானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்து இருப்பதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் இந்நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்தது. மேலும் இது தொடர்பாக விசாரிக்க சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக நடந்து வந்தது. இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம், சென்னை ஆர்.கே.எம்.பவர்ஜென் நிறுவனத்தின் வங்கிக் கணக்கை முடக்கம் செய்து உத்தரவிட்டனர்.
வழக்கின் நடவடிக்கைகளை தொடர்ந்து அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையினை மேற்கொண்டது. எனினும் இதனை எதிர்த்து ஆர்.கே.எம். பவர்ஜென் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கானது நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அமர்வு விசாரித்தது.
சூப்பர் போலீஸ் கிடையாது
அப்போது வழக்கின் மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் பி. குமார், எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நீதிபதிகள் கூறுகையில், ஒரு குற்றம் நடந்தால் அது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு தனி நபர்கள் கொண்டு வரலாம்.
ஆனால் இந்த வழக்கில் புகார்கள் என்று எதுவும் இல்லை. நிலக்கரி எடுக்கும் பணியும் நடைபெறவில்லை. அப்படி இருக்கின்ற போது, எதைப் பற்றி வேண்டுமானாலும் விசாரிக்க அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் கிடையாது. கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத்த ட்ரோன் என்ற கருவியும் இல்லை.
அமலாக்கத்துறைக்கு அபராதம் விதிக்கப்படும்
ஒரு குற்றச் செயல் நடந்து இருந்தால் தான், அது குறித்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், குற்றமே நடக்காத நிலையில், அமலாக்கத்துறையால் நடவடிக்கை எடுக்க முடியாது.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை காரணமாக உங்களுக்கு (மனுதாரர்) ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுவின் அடிப்படையில், அமலாக்கத்துறைக்கு அபராதம் விதிக்கப்படும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications