அமலாக்கத்துறை இல்லைன்னா என்ன! தமிழ்நாட்டில் நேரடியாக களமிறங்கும் அமித் ஷா! திருச்சி சூர்யா தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் நேரடியாக அமித் ஷா கவனம் செலுத்தி வருகிறார். டாஸ்மாக் விஷயத்தை மூடினால், வேறு விஷயத்தை கையில் எடுப்பார்கள். அமலாக்கத்துறை இப்போது இறங்கி வந்துள்ளது. அடுத்து கண்டிப்பாக தமிழ்நாட்டில் கைதுகள் நடப்பது உறுதி என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை 22-ந்தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான முதல் அமர்வு, தனி நபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தது. இறுதியில், டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.

திருச்சி சூர்யா பேட்டி
இது தொடர்பாக திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அமலாக்கத்துறையிடம் சில ஆதாரங்கள் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள். தமிழ்நாட்டில் யாராக இருந்தாலும் தேர்தலை சந்திக்க பணம் வேண்டும். ஒரு தொகுதிக்கு 30 கோடியாவது வேண்டும். அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. மணல் மட்டும் டாஸ்மாக் வழியாக மட்டுமே இதை செய்ய முடியும். மணலை முடக்கிவிட்டனர். இப்போது டாஸ்மாக்கை முடக்க உள்ளனர்.
செந்தில் பாலாஜி ஏற்கனவே சரண்டர் ஆகிவிட்டார். அவர் டெல்லியிடம் சரண்டர் ஆகிவிட்டார். இத்தனை காலம் ரத்தீஷ் பற்றி எல்லாம் யாருக்கும் தெரியாது. அவர்கள் பெயர் எல்லாம் எப்படி தெரிந்தது? அவர்கள் எல்லாம் ஏன் தலைமறைவாக வேண்டும்? இவர்களை எல்லாம் ரெய்டு விடுங்கள் என்று செந்தில் பாலாஜிதான் கூறி உள்ளார். அவர்கள் இத்தனை காலம் வெளியே தெரியாமல் இருந்தனர். இப்போது எப்படி வெளியே சிக்கி உள்ளனர். தமிழ்நாட்டில் அதிமுகவை கட்டுப்படுத்திவிட்டனர்.
அடுத்து திமுகவை அடித்து காலி செய்ய உள்ளனர். அமித் ஷா நேரடியாக தமிழ்நாட்டில் கவனம் செலுத்தி வருகிறார். டாஸ்மாக் விஷயத்தை மூடினால், வேறு விஷயத்தை கையில் எடுப்பார்கள். அமலாக்கத்துறை இப்போது இறங்கி வந்துள்ளது. அடுத்து கண்டிப்பாக தமிழ்நாட்டில் கைதுகள் நடப்பது உறுதி, என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டெல்லியிடம் பேசிய செந்தில் பாலாஜி.. நான் மட்டுமா சம்பாதிக்கிறேன் என்று கூறி கே என் நேருவை கைகாட்டி இருக்கிறார். கே என் நேரு திமுகவில் கைதாக போகும் முதல் அமைச்சராக இருக்க போகிறார். அவரை அடுத்து கைது செய்ய போகிறார்கள். அவர் வெயிட்டாக மாட்டி இருக்கிறார். அதனால் மிக விரைவில் நேரு கைதாக இருக்கிறார்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications