சிக்கிய முக்கிய ஆவணங்கள்.. சினிமா தயாரிப்பாளர்கள் ரவீந்தர், பாலாஜி வீடுகளில் 2வது நாளாக ED ரெய்டு!
சென்னை: சினிமா தயாரிப்பாளர் பாலாஜி வீட்டில் இன்று இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீடு, அலுவலகத்திலும் அமலாக்கத்துறை ரெய்டு இன்று 2வது நாளாக தொடர்கிறது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீடு, தயாரிப்பாளர் பாலாஜி கபா வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தொடர்ந்து வருகிறது.

சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி கபா (48). இவர் சினிமா தயாரிப்பாளராக இருந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் என்ற படத்தை தயாரித்து உள்ளார்.
பாலாஜிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு சினிமா தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவிந்தர் சந்திரசேகர் அறிமுகமானார். நாளடைவில் தொழில் தொடங்குவதற்காக பார்ட்னட்ராக சேரும் அளவுக்கு நெருங்கி உள்ளனர்.
கடந்த ஆண்டு திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் தொடங்க இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறி, போலியான ஆவணங்களை காண்பித்து, தன்னை ஏமாற்றி ரூ.16 கோடியை பெற்றுக் கொண்டதாக ரவீந்தர் சந்திரசேகர் மீது பாலாஜி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, சென்னை அசோக்நகர் பகுதியில் வசித்து வந்த சினிமா தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவீந்தர் லிப்ரா புரொடக்ஷன் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்து பல சினிமா படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ரவீந்தர், பாலாஜி கபா ஆகிய இருவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் தொழிலதிபர் பாலாஜி, வங்கி அதிகாரி வீடு என 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக கிடைத்த தகவலின் படி இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், பென் டிரைவ் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சினிமா தயாரிப்பாளர் பாலாஜி வீட்டில் இன்று இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வளசரவாக்கத்தில் உள்ள பாலாஜியின் அலுவலகத்திலும் சோதனை தொடர்கிறது. கேகே நகரில் உள்ள தயாரிப்பாளர் ரவீந்தர் வீடு, அசோக் நகரில் உள்ள அவரது அலுவலகத்திலும் அமலாக்கத்துறை ரெய்டு 2வது நாளாக தொடர்கிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications