இங்கே செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தரும் போதே.. அங்கே வேலையை காட்டிய அமலாக்கத்துறை.. மொத்தமா போச்சே!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடக்க உள்ள நிலையில் இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை முக்கியமான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. சமீபத்தில் அவருக்கு நெருக்கமான இடத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. அமலாக்கத்துறை ரெய்டுக்கு முன் வருமான வரித்துறை நடந்தது. இந்தியாவில் நடந்த பெரிய ரெய்டுகளில் ஒன்றாக.. நீண்ட ரெய்டுகளில் ஒன்றாக இந்த ரெய்டுகள் பார்க்கப்பட்டன.

அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்தது. முக்கியமாக அரசு ஒப்பந்ததாரர்கள் மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது. டாஸ்மாக் ஒப்பந்தம், மின்சாரத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் முதலில் 40ல் தான் ரெய்டு நடந்தது. அவரின் தம்பி அசோக் வீட்டில் 2 நாட்கள் மட்டுமே ரெய்டு நடந்தது.ஆனால் முதல் நாளே 40 இடங்கள் 200 இடங்களாக உயர்த்தப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் யாரையும் விட்டு வைக்காமல் வருமான வரித்துறையினர் தீவிரமாக ரெய்டு மேற்கொண்டது. அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரருமான சங்கரானந்தா வீட்டிலும், அலுவலகத்திலும் ரெய்டு மேற்கொண்டது.
அமலாக்கத்துறை ரெய்டு; அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து உள்ளனர்.
நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடந்தது.
நேற்று மொத்தமாக 17 மணி நேரம் சோதனை நடந்தது. வீட்டோடு சேர்த்து தற்போது தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.
தலைமை செயலகத்தில் 10 மணி நேரம் சோதனை நடந்தது. அலுவலக உதவியாளர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் உள்ளதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அமைச்சர் அலுவலகத்திற்கு இந்தியன் வங்கி அதிகாரிகளையும் அழைத்து சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அவரின் வீடு உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை நடந்தன.
சோதனை ஓவர்: இந்த நிலையிகள் 17 மணி நேரங்களுக்கு பின் அவர் வீட்டில் சோதனைகள் முடிந்தது. செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்தில் 17 மணி நேர சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
சோதனை முடிந்த அவரின் வீட்டிற்கு உயரதிகாரிகள் வந்தனர். அவரை கைது செய்வது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர். இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. நெஞ்சை பிடித்துக்கொண்டு காரில் படுத்துக்கொண்டு செந்தில் பாலாஜி அழுது இருக்கிறார். உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சில நிமிடங்களுக்கு முன் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆஞ்சியோ என்பது தமனி சார்ந்த பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும். இதுபோக குறுகலான அல்லது தடைபட்ட தமனிகளை சரி செய்ய பயன்படுத்தப்படும். மேலும் நரம்புகளை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும்.
இந்த பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடக்க உள்ள நிலையில் இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை முக்கியமான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை 'சீல்' வைத்துள்ளனர். நேற்று நடத்திய ரெய்டின் அடிப்படையில் அவரின் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications