சுற்றி அமர்ந்த அதிகாரிகள்.. பயமுறுத்திய நம்பர் 7! செந்தில் பாலாஜி கொட்டிய "வாக்குமூலம்".. அவ்ளோதானா?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்கப்பட்ட முக்கியமான சில கேள்விகளுக்கு அவர் அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலங்களை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக அவரிடம் சில கேள்விகளை அமலாக்கத்துறை மீண்டும் மீண்டும் அழுத்தி அழுத்தி கேட்டதாக கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இன்று காலை 9 மணிக்கு அமலாக்கத்துறை விசாரணை மீண்டும் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இன்றும் அவரிடம் 50 கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை இரண்டு நாள் விசாரணை முடிந்துவிட்டது. நேற்று நடத்தப்பட்ட விசாரணை, ரெய்டு அடிப்படையில்தான் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கின் மனைவி கட்டுவதாக கூறப்படும் கரூர் பங்களாவிற்கு சீல் வைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி வாக்குமூலம் - அதற்கு முன் நடத்தப்பட்ட ரெய்டு ஆவணங்கள் அடிப்படையில் இந்த சீல் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் போக்குவரத்து துறை ஊழல் தொடர்பாகவும் செந்தில் பாலாஜியிடம் கேள்விகளை கேட்டுள்ளனர்.
கேள்விகள்: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அவரை கைது செய்தனர். இதனால் அது தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் கேள்விகளை கேட்டுள்ளனர்.
சுற்றிய அதிகாரிகள்: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்தது உண்மையா? அதில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா? போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது.இதில் முதலீடுகள் மறைக்கப்பட்டு இருந்தால் அதற்கு உடந்தையாக இருந்தது யாரெல்லாம்?
இதில் பெறப்பட்ட பணம் வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதா? செந்தில் பாலாஜி தம்பி அசோக்கிற்கு இதில் தொடர்பு உள்ளதா? எந்தெந்த நிறுவனங்களில் இந்த பணம் முதலீடு செய்யப்பட்டது.
தற்போதைய அரசு நிர்வாகிகள் அதிகாரிகள் யாருக்கெல்லாம் இதில் பங்கு உண்டு என்று அதிகாரபூர்வமாக கேள்விகளை அமலாக்கத்துறை கேட்டதாக கூறப்படுகிறது.
அதுபோக்கில அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை சுற்றி அமர்ந்து கொண்டு 3 பேர் கேள்வி கேட்க , ஒருவர் அதை டைப் செய்தபடி இருந்துள்ளார். அப்போது 7 ஆவணங்களை காட்டி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? உங்களின் சொத்து ஆவணங்கள் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். அதற்கு.. எனக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று செந்தில் பாலாஜி கூறி இருக்கிறார்.
நேற்று சில விஷயங்கள் குறித்து அவர் நீண்ட நேரம் விளக்கங்களை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதை எல்லாம் அமலாக்கத்துறை ரெக்கார்ட் செய்துள்ளது.செந்தில் பாலாஜி கொடுத்த வாக்குமூலங்கள் அமலாக்கத்துறை மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜியை மேலும் கஸ்டடியில் எடுக்கவும், அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அமலாக்கத்துறை விரும்பும் என்கிறார்கள். அதிகாரபூர்வமாக இதில் கேள்விகளை அமலாக்கத்துறை கேட்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications