சிவாஜி பட பாணி பிளான்.. அமலாக்கத்துறையின் அல்லோகல மூவ்.. செந்தில் பாலாஜிக்கு சிக்கல்.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜி தம்பி மனைவி நிர்மலாவை விசாரணைக்கு அழைக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. அவர் பெயரில்தான் வீடு இருந்தது என்பதால் அவரை விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்ற நிலையில் 3000 பக்க விசாரணை அறிக்கையை ட்ரங்க் பெட்டி ஒன்றில் வைத்து அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான பல்வேறு முக்கிய விவரங்கள் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விசாரணையில் கூறிய விஷயங்கள் கூற மறுத்த விஷயங்கள் ஆகியவை எல்லாம் மொத்தமாக டைப் செய்யப்பட்டு அதன் முடிவுகளும் விவரிக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

Enforcement Directorate to investigate Minister Senthil Balaji brothers wife soon

செந்தில் பாலாஜி தம்பி: இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பிய அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. அசோக்கிற்கு 3-வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனின் கெடு 27-ந்தேதி முடிவடைகிறது. அதற்குள் அமலாக்கத்துறையின் இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அவர் ஆஜராக வேண்டும். 27-ந்தேதி வரை தான் அவருக்கு கடைசி கெடு.

அன்றைய தினம் அவர் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தால், அவரை தலைமறைவு குற்றவாளியாகவும், தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அறிவிக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறதாம். 27-ந்தேதி ஆஜராகச் சொல்லி அனுப்பப்பட்ட சம்மனுக்கு, இதய நோய் சிகிச்சையில் நான் இருந்து வருவதாலும், அந்த சிகிச்சை முடிய சில மாதங்கள் ஆகுமென்பதாலும் நேரில் ஆஜராக 6 மாத கால அவகாசம் தர வேண்டும் என கடிதம் மூலமாக கோரிக்கை வைத்தார் அசோக்.

அந்த கோரிக்கை கடிதம் அமலாக்கத்துறையால் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் அசோக்கின் இருப்பிடத்தை மத்திய உளவுத்துறை கண்டறிந்து அமலாக்கத்துறைக்கு தெரியப்படுத்தி விட்டது.

அந்த வகையில், அசோக் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது அமலாக்கத்துறைக்கு தெரியும். அதனால், 27-ந்தேதி அவர் ஆஜராகாமல் தவிர்த்தால், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து விட்டு, அவரை கைது செய்யும் அதிரடி நடவடிக்கையில் குதிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறதாம்.

செந்தில் பாலாஜி தம்பி மனைவி: இந்த நிலையில் நேற்று முதல்நாள் விசாரணைக்கு இடையே செந்தில் பாலாஜியிடம்.. உங்களுக்கு சொந்தமான முக்கிய சொத்துக்களை முடக்கி உள்ளோம். முக்கியமாக உங்கள் தம்பி அசோக்கின் மனைவி கட்டி வரும் வீட்டை சீல் வைத்து உள்ளோம்.

இதன் கட்டுமானத்தை முடக்கி உள்ளோம் என்று கூறி உள்ளனர். செந்தில் பாலாஜியிடம் விசாரணை செய்வதற்கு இடையில் இந்த அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளனர். ஆனால் செந்தில் பாலாஜி இதை கேட்டுவிட்டு.. அது என்னுடைய வீடே கிடையாது. அதற்கும் எனக்கும் தொடர்பே இல்லையே. அதை முடக்குவதால் என்ன பயன் இருக்க முடியும். அந்த வீடு நான் முறைகேடு செய்ததால் வாங்கப்பட்டதாக உங்களால் சொல்ல முடியுமா என்று பதில் கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி தம்பி மனைவி நிர்மலாவை விசாரணைக்கு அழைக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. அவர் பெயரில்தான் வீடு இருந்தது என்பதால் அவரை விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதோடு அவரிடம்.. நீங்கள் உண்மையை சொன்னால் உங்கள் கணவரை கைது செய்ய வேண்டி இருக்காது என்று நடிகர் ரஜினியின் சிவாஜி பட பாணியில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+