Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருத்துவர்களை சந்தேகிக்க கூடாது! செந்தில் பாலாஜியை காவிரி மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில்பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்த மனுவில் அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. இதில் செந்தில் பாலாஜியை காவிரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்பான 3 மனுக்கள் மீதான விசாரணை நேற்று முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தீர்ப்பு 1 - செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணையில் எடுக்க வேண்டும் என்ற மனு மீதான தீர்ப்பு.

 Enforcement directorate wants AIIMS to check the health of Minister V Senthil Balaji

தீர்ப்பு 2 - செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்பது தொடர்பான மனுவில் தீர்ப்பு. தீர்ப்பு 3- ஓமந்தூரார் மருத்துவமனையில் இருப்பவரை காவிரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்பது தொடர்பான தீர்ப்பு.

இதில் ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை விதிக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. மற்ற மேலே உள்ள 3 மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி அள்ளி இன்று வழங்குகிறார்.

கூடுதல் மனு: இந்த நிலையில்தான் கூடுதலாக செந்தில்பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனுவை செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனுவுடன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி முடிவு செய்தார். நேற்று தமிழக மருத்துவக் குழு அளித்த அறிக்கையில் நம்பிக்கை இல்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

நேற்று அமலாக்கத்துறையிடம் இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பதாக தமிழக அரசு மருத்துவக்குழு அறிக்கை அளித்தது. அதோடு பைபாஸ் அறுவை சிகிச்சைக்கும் பரிந்துரை செய்திருந்தது. செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதனால் அவருக்கு தற்போது பைபாஸ் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய குழுவும் ஆய்வு: தமிழக மருத்துவ குழு மட்டுமின்றி சென்னை, கே.கே.நகரில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். இவர்கள் அமலாக்கத்துறை மற்றும் நீதிபதி அல்லியிடமும் அறிக்கையை கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஏனோ நேற்று இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை இன்று ஏற்கவில்லை. இதையடுத்தே இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை தற்போது செந்தில்பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

வழக்கு வாதம்: ஆனால் இதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு செல்ல செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை தற்போது செந்தில்பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டுதான் பரிசோதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் இளங்கோவன் அளித்த பதிலில் தாராளமாக.. பட் ஒன்லி டெல்லி எய்ம்ஸ்.. மதுரை எய்ம்ஸ் கிடையாது என்று செந்தில் பாலாஜி வழக்கறிஞர் அதிரடி பதில் அளித்துள்ளார்.

மேற்கொண்டு அமலாக்கத்துறை வைத்த வாதத்தில், செந்தில் பாலாஜிக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனர். அதற்கான அவசியம் இல்லை என்று நாங்கள் கூறுகிறோம்.

செந்தில் பாலாஜி உடல்நிலையை கண்காணிக்க சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.செந்தில் பாலாஜியை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற கூடாது, தனியாருக்கும் மாற்ற கூடாது என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது.

செந்தில் பாலாஜி நேற்று முதல்நாள் வரை ஆரோக்கியமாக இருந்த போது எப்படி உடல்நிலை மோசமாகும், என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது. ஆனால் அமலாக்கத்துறை வாதத்தை உயர் நீதிமன்றம் இறுதியில் ஏற்கவில்லை.

அதன்படி கடைசியாக, செந்தில்பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்த மனுவில் அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. இதில் செந்தில் பாலாஜியை காவிரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+