திருச்சில தொடங்குனாங்களே.. மோடி அறிவித்த செறிவூட்டப்பட்ட அரிசி கார்ப்பரேட் சதியா? ஐகோர்டில் வாதம்
சென்னை: உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கிற்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு வழங்கி சோதனை செய்யும் விரைவு திட்டத்துக்கு மத்திய அரசு 174 கோடியே 64 லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சி உள்பட நாடு முழுவதும் 13 மாவட்டங்களை 2018 ஆம் ஆண்டு தேர்வு செய்து மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கியது.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் வழங்கும் விதமாக, ரேஷன் கடைகளில் உள்ள பொது வினியோக திட்டம் வாயிலாகவும், பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டம் வாயிலாகவும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்தார்.
இதன்படி ரேஷன் கடைகள், மதிய உணவு திட்டம் உள்ளிட்டவைகள் மூலம் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க கோரி தமிழ் தேசிய பேரியக்கத்தின் மகளிர் ஆயத்தின் செயலாளர் கனிமொழி மணிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், பெரும்பாலான இந்திய பெண்களுக்கு ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுவதாகவும், செறிவூட்டப்பட்ட உணவு ஒழுங்குமுறை சட்ட விதியின்படி, தலசீமியா, ரத்த சோகை உள்ளவர்கள் இரும்புசத்து கொண்ட செறிவூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என்றும், எந்தவொரு முறையான ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல், மக்களுக்கு அதை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களின் ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும், நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அளவில் உடல் நல பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான கார்ப்பேரேட் நிறுவனங்களின் மறைமுகத் திட்டமாக உள்ளதாகவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

எனவே செறிவூட்டப்பட்ட அரிசியை மத்திய அரசு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை அவர் வைத்துள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், விரைவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 13 மாவட்டங்களில், ஆந்திரா மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தை தவிர, வேறு எந்த மாவட்டத்திலும் ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என்று நிதி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதையடுத்து, வழக்கிற்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications