EPF Special Camps: சென்னை உள்ளிட்ட 10 இடங்களில்.. நாளை இபிஎப் சிறப்பு முகாம்
சென்னை: சென்னை, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் வருங்கால வைப்பு நிதி (EPF) உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இதில் குறைதீர் சேவைகள், ஆன்லைன் வசதிகள் விளக்கம், டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் சமர்ப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளதாக வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வருங்கால வைப்பு நிதி கமிஷனர் நிஷா-1 ஒவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: 'நிதி ஆப்கே நிகத்' வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற முகாம் சென்னை, வேலூர், புதுச்சேரி உள்பட 10 இடங்களில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடக்கிறது.

சென்னை தியாகராயநகரில் உள்ள ஓட்டல் ரெசிடென்சி, அண்ணாநகர் மேற்கில் உள்ள எஸ்.பி.ஐ.ஓ.ஏ. கல்வி அறக்கட்டளை, கும்மிடிப்பூண்டி சிப் காட் தொழிற்பேட்டையில் உள்ள மிட்சுபா இந்தியா பிரைவேட் நிறுவனம், காஞ்சிபுரம் பெரியார் நகரில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனம், தாம்பரம் மெப்ஸ்-ல் உள்ள மெப்ஸ் மாநாட்டு அரங்கத்தில் முகாம் நடைபெற உள்ளது.
முகாமில், வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், முதலாளிகளிடம் இருந்து பெறப்படும் குறைகளை நிவர்த்தி செய்தல், தொழிலாளர்களுக்கு ஆன்லைன் சேவைகள் பற்றி விளக்குதல், சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்நடைபெறும். முகாமில் பங்கேற்க
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeVqvdARtdgVj11FgH4aP1DICCW08OAFGA-k2alOMdDNTxwMQ/viewform?usp=sharing-amp;ouid=106859029795621361670 என்ற படிவத்தில் விவரத்தை நிரப்பி அனுப்பவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications