மாத சம்பளதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. லட்டு மாதிரி எட்டு அறிவிப்புகள்! EPFO கொடுத்த சூப்பர் அப்டேட்!
சென்னை: தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் வருங்கால நிதி சேமிப்புகளை பாதுகாக்கும் EPFO (Employees' Provident Fund Organisation), சமீபத்தில் பல முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் பணம், ஓய்வூதியம் மற்றும் கணக்குகளை எளிதாக ஆன்லைனில் நிர்வகிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த புதிய மாற்றங்களால் தொழிலாளர்களுக்கு 8 நன்மைகள் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இபிஎஃப்ஓ என அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் மாதம் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறது. மேலும் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் செலுத்துகின்றன.
இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி மற்றும் பென்ஷன் நிதி ஆகியவை தங்கள் கணக்கில் பராமரிக்கப்படும். பணியில் இருந்து ஓய்வு பெறும் போது இந்த நிதி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அவசர தேவைக்காகவும் இபிஎஃப்ஓ பணத்தை தொழிலாளர்கள் எடுத்துக் கொள்ளலாம். அவை என்னென்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..

டிஜிட்டல் மயமாக்கல்
EPFO தற்போது தனது சேவைகளை முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றியுள்ளது. புதிய "EPFO 3.0" முறைமையில், கோர் பேங்கிங் மற்றும் API இணைப்புகள் மூலம் உறுப்பினர்கள் தங்கள் பண பரிமாற்றங்களை உடனுக்குடன் பார்க்க முடியும். இதனால் அலுவலக சிக்கல்கள் குறைந்து, நேரடி வசதி கிடைக்கும்.
பணம் எடுக்கும் விதிகள் எளிதாக்கம்
முன்பு 13 பிரிவுகளாக இருந்த பணம் எடுக்கும் விதிகள், தற்போது மூன்று பிரிவுகளாக சுருக்கப்பட்டுள்ளன - அவசர தேவைகள், வீட்டு தேவைகள், சிறப்பு சூழ்நிலைகள் என பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் நிதி திரும்பப்பெறும் செயல்முறை விரைவாக முடிகிறது.
கல்வி, திருமண செலவுகள்
கல்விக்காக 10 முறை வரை, திருமணத்திற்காக 5 முறை வரை பணம் எடுக்கலாம் என புதிய விதிகள் அனுமதிக்கின்றன. முன்பு இதற்கு கடுமையான வரம்புகள் இருந்தன.
100% பணம் எடுக்கும் அனுமதி
நீண்டகால நோய், வேலை இழப்பு போன்ற சில சூழ்நிலைகளில், ஊழியர்கள் தங்கள் EPF தொகையை முழுமையாக (100%) பெறலாம். முன்பு இது 75% வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
ஓய்வூதிய விதிகளில் மாற்றம்
முன்பு பணியில் இருந்து விலகிய பின் 2 மாதங்களில் ஓய்வூதியம் பெற முடிந்தது. புதிய விதிகளின்படி, இது 36 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை இழந்தவர்களுக்கு நிதி பாதுகாப்பு அதிகரிக்கும்.
டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் வசதி
ஓய்வூதியர்கள் இனி அலுவலகம் செல்லாமல், வீட்டிலிருந்தே தங்கள் லைஃப் சான்றிதழை (Life Certificate) ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். முதியோருக்கு இது மிகப் பெரிய உதவியாகும்.
தாமத வழக்குகளுக்கு தீர்வு
பணமெடுப்பு தாமதம் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக தீர்க்க "Vishwas Scheme" என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வேலை மாற்றம் எளிதாக்கம்
வேலை மாறும்போது, EPF கணக்கை புதிய நிறுவனத்துடன் இணைக்க தற்போது எந்த நிறுவனத்தின் ஒப்புதலும் தேவையில்லை. ஆன்லைனில் சில நிமிடங்களில் மாற்றம் செய்யலாம். இந்த மாற்றங்கள் மூலம் EPFO-வின் சேவைகள் மேலும் வெளிப்படையானவையும் வேகமானவையாகவும் மாறும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். புதிய டிஜிட்டல் முறைமை மூலம் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் அனைவரும் நேரடி நன்மை பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications