Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

EPFO: பிஎஃப் கணக்கில் இருந்து தானாகவே வங்கி அக்கவுண்டுக்கு டெபாசிட் ஆகும் பணம்.. யாருக்கெல்லாம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருங்கால வைப்பு நிதியினை தொழிலாளர்கள் சிரமம் இன்றி பெறும் வகையில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது யுபிஐ மூலமாகவும் பெறும் வசதி கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தற்போது செயல்படாமல் உள்ள பிஎஃப் கணக்கில் இருந்து தானாகவே வங்கி அக்கவுண்டிற்கு பணம் டெப்பாசிட் ஆகும் வசதியினை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.

இபிஎஃப்ஒ எனப்படும் வருங்கால வைப்பு நிதி தொழிலாளர்களின் எதிர்கால சேமிப்பு திட்டமாக உள்ளது. ஊழியர்களின் சம்பள தொகையில் 12 சதவீதம் பிஎஃப் தொகைக்கு பிடித்தம் செய்யப்படும். இதே அளவுள்ள தொகையை ஊழியரின் பிஎஃப் கணக்கில் நிறுவனமும் செலுத்த வேண்டும்.

EPFO Automatic PF Transfer to Bank Accounts Announced Check Eligibility

வருங்கால வைப்பு நிதி

இந்த பிஎஃப் கணக்கில் உள்ள தொகைக்கு ஆண்டுக்கு 8.25 சதவீதம் வட்டி அளிக்கப்படும். ஊழியர்களுக்கான மறைமுக சேமிப்பு திட்டமாக இருப்பதால் இது அவர்களின் ஓய்வு காலத்தில் மிகப்பெரும் பயனுள்ளதாக இருக்கும். பிஎஃப் கணக்கில் உள்ள தொகையை மருத்துவ செலவுகள், வீடு கட்ட, திருமணம் போன்ற காரணங்களுக்காக குறிப்பிட்ட சதவீதம் எடுத்துக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை முன்கூட்டியே எடுத்துக்கொள்ள் முடியும். வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தை திரும்ப பெறுவதில் தற்போது எளிய வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தானாகவே வங்கி கணக்கிற்கு டெபாசிட் ஆகும்

யுபிஐ வழியாகவே பணம் எடுக்கும் அளவிற்கு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் பணத்தை திரும்ப பெறுவதில் இருந்த தேவையற்ற சிரமங்களை குறைப்பதாக உள்ளது. இபிஎஃப்ஒ-வில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் செய்து வருகிறது.

சிபிஎஸ்இ 10 & 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு.. மத்திய கிழக்கு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு
சிபிஎஸ்இ 10 & 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு.. மத்திய கிழக்கு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு

அந்த வகையில், செயல்படாத பிஎஃப் கணக்கில் உள்ள தொகையை, சந்தாதாரர்கள் உரிமை கோராவிட்டாலும் அவர்களது வங்கி கணக்கிற்கே நேரடியாக வரவு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, குறைந்த அளவு இருப்பு கொண்ட 7 லட்சம் இபிஎஃப்ஓ கணக்குகளில் உள்ள தொகையை, எவ்வித விண்ணப்பமும் இன்றி நேரடியாக சந்தாதாரரின் வங்கி கணக்கிற்கு தானாகவே திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் இருக்கும் சிறு தொகையை திரும்ப வழங்கும் முக்கிய நடவடிக்கையை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

தானாகவே வரவு வைக்கும் பணி

இதன்படி, 7 லட்சத்திற்கு அதிகமான செயல் இழந்த கணக்குகளில் உள்ள நிதி, எவ்வித விண்ணப்பமும் இன்றி நேரடியாக சந்தாதாரரின் வங்கி கணக்கிற்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருப்பு வைத்துக் கொண்டு நீண்ட காலமாக செயல்பாடு இல்லாத 7.16 லட்சம் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

RRB Group D: ரயில்வே குரூப் டி: 22,195 பணியிடங்கள்.. ஒரு நாள்தான் டைம் இருக்கு! மறக்காமல் விண்ணப்பிங்க</a><a class=" title="RRB Group D: ரயில்வே குரூப் டி: 22,195 பணியிடங்கள்.. ஒரு நாள்தான் டைம் இருக்கு! மறக்காமல் விண்ணப்பிங்க" loading="lazy" width="100" height="56" />
RRB Group D: ரயில்வே குரூப் டி: 22,195 பணியிடங்கள்.. ஒரு நாள்தான் டைம் இருக்கு! மறக்காமல் விண்ணப்பிங்க

இந்த கணக்குகளில் உள்ள தொகையை சம்பந்தப்பட்ட ஆதார் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் தானாகவே வரவு வைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்த நடைமுறைக்காக சந்தாதரர்கள் எந்த ஒரு படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை. அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டியது இல்லை.

31.86 லட்​சம் கணக்குகள் செயல்படாமல் உள்ளது

சந்தாரார்கள் உயிரிழந்து இருந்தால் அவர்களின் வாரிசுகள் அல்லது நாமினிகளுக்கு முறையாக ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. பொதுவாக ஒரு பிஎஃப் கணக்கிற்கு 36 மாதங்கள் பங்களிப்பு வரவில்லை என்றால், அது செயல் இழந்த கணக்கு என்று கருதப்படும்.

வேலை மாற்றம், ஓய்வு அல்லது சிறு தொகை என்பதால் கவனமின்மை ஆகிய காரணங்களால் இவ்வளவு கணக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். மொத்தம் 31.86 லட்​சம் இபிஎஃப்ஓ கணக்குகள் செயல்படாமல் இருப்பதாகவும் இவற்​றில் மொத்​தம் ரூ.10,903 கோடி வைப்​புத் தொகை உள்ளது என்று தரவுகள் காட்டுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+