மனசை குளிர வச்சிட்டாங்க.. நாடு முழுக்க பல கோடி ஊழியர்களுக்கு அரசு தந்த சர்ப்ரைஸ்.. அசத்தல் அறிவிப்பு
சென்னை: தொழிலாளர் அமைச்சகம் EPFO இன் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களைச் கொண்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களாக இதில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அதில் முக்கியமான சில மாற்றங்களை இங்கே பார்க்கலாம்.
1. ஒரு வேலையில் ஆறு மாதங்கள் பணியை முடிக்காத புதிய பணியாளர்கள் முன்பு இபிஎப்ஓ தொகையை எடுக்க முடியாது. இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு உள்ளது. இனி நீங்கள் பணிக்கு சேர்ந்த அடுத்த மாதமே கூட பிஎப் தொகையை நிதியை திரும்பப் பெறத் தகுதி பெறுவீர்கள்.
2. அதேபோல் மத்திய அரசு, 1995ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) திருத்தம் கொண்டு உள்ளது. ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவையில் உள்ள ஊழியர்களுக்கு withdrawal benefits எனப்படும் திரும்பப் பெறும் பலன்களை வழங்குகிறது. பல்வேறு துறைகளில் பணிகளில் உள்ள சராசரியாக 7 லட்சம் பேருக்கும் அதிகமானோர் சந்தோசம் அடையும் வகையில் இபிஎப்ஓ விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

நாடு முழுக்க உள்ள ஊழியர்களுக்கு இதற்கான செய்தியை மத்திய அரசு அனுப்பி உள்ளது. மத்திய அரசாங்க அறிக்கையின்படி, இந்தத் திருத்தம் ஆறு மாதங்களுக்கும் குறைவான பங்களிப்பு சேவையுடன் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஆனது. அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பின் வேலையை விட்டு விட்டு வெளியேறும் 7 லட்சத்திற்கும் அதிகமான EPS உறுப்பினர்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்திற்கான சேவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதையும், வழங்கப்படும் சேவையின் விகிதத்தில் withdrawal benefits பலன்கள் வழங்கப்படுவதையும் உறுதிசெய்யும் வகையில், அட்டவணை D ஐயும் மத்திய அரசு மாற்றியுள்ளது. அட்டவணை D என்பது திட்டத்தின் தகுதிக்கு தேவையான சேவையை வழங்காத உறுப்பினர்கள் அல்லது 58 வயதை எட்டிய உறுப்பினர்களைக் குறிக்கிறது.
இப்போது திரும்பப் பெறக்கூடிய தொகையானது ஒரு உறுப்பினர் சேவையை முடித்த மாதங்கள் மற்றும் EPS பங்களிப்பு பெறப்பட்ட ஊதியத்தைப் பொறுத்தது.
3. இதில் புதிய டிஜிட்டல் கட்டமைப்பு மாற்றப்பட்டு உள்ளது. முன்பு இதில் பணம் எடுப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
4. அரசாங்கத்தால் நடத்தப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓவில் இருந்து ஊழியர்கள் இனி தங்கள் தனிப்பட்ட நிதித் தேவைகளுக்காக தங்கள் கணக்குகளில் இருந்து ஒரே நேரத்தில் ₹1 லட்சம் வரை எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முந்தைய வரம்பு ₹50,000 ஆக இருந்தது. இது தற்போது இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
பழைய முறை எப்படி: முன்னதாக, திரும்பப் பெறும் பலன், முடிந்த ஆண்டுகளில் பங்களிப்பு சேவையின் காலம் மற்றும் EPS பங்களிப்பு செலுத்தப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. இதில் கட்டாய ஆறு மாத பங்களிப்பு சேவையும் அடங்கும். எனவே, ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட மாதங்கள் ஒரு வேலையில் பங்களிப்பு சேவையை முடித்த பிறகு, உறுப்பினர்களுக்கு பலன்கள் வழங்கப்பட்டன. ஆறு மாதங்களுக்கு முன் திட்டத்தில் இருந்து வெளியேறும் உறுப்பினர்களுக்கு பலன்கள் கிடைக்காது. ஆனால் இனிமேல் அப்படி கிடையாது.
ஒரு பணியில் இருந்து 6 மாதங்களுக்கு முன் விலகினால் கூட withdrawal benefits கிடைக்கும். புதிய சட்டப்படி ஆறு மாதங்களுக்கு முன் திட்டத்தில் இருந்து வெளியேறும் உறுப்பினர்களுக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் மாற்றப்பட்டு உள்ளன.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications