பிஎஃப் பணம்.. சென்னை உள்பட 10 இடங்களில் நாளை மிஸ் பண்ணிடாதீங்க.. வெளியான குட்நியூஸ்
சென்னை: பிஎஃப் குறைதீர் முகாம் என்பது ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் நடைபெறுவது வழக்கம், குறிப்பாக மாதக்கடைசியில் இந்த முகாமை ஒவ்வொரு மண்டல அலுவலகமும் நடத்தும்.. அப்போது பிஎஃப் தொடர்பான குறைகளை கூறினால் உடனே நிவர்த்தி செய்வார்கள். அந்த முகாம் சென்னை உள்பட 10 இடங்களில் நாளை நடக்கிறது.
வருங்கால வைப்பு நிதி கமிஷனர்-1 ஹிமான்ஷு குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- 'நிதி ஆப்கே நிகத்' அதாவது வைப்புநிதி உங்கள் அருகாமையில் என்ற குறைதீர்க்கும் முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை 10 இடங்களில் நடைபெற உள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள சர் சிவசாமி கலாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், அம்பத்தூர் தொழிற்பேட்டையிலும், வேலப்பஞ்சாவடியில் உள்ள ஹர்ஷா டொயோட்டாவிலும், செங்கல்பட்டில் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் உள்ள ஆடை மற்றும் பேஷன் துணைக் கருவிகள் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், படப்பை வஞ்சவாஞ்சேரியில் உள்ள தானிஷ் அகமது என்ஜினீயரிங் கல்லூரி அயனாவரம் கல்வி அறக்கட்டளையிலும் முகாம் நடைபெற உள்ளது.
முகாமில், வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், முதலாளிகளிடம் இருந்து பெறப்படும் குறைகளை நிவர்த்தி செய்தல், தொழிலாளர்களுக்கு ஆன்லைன் சேவைகள் பற்றி விளக்குதல், சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். முகாமில் பங்கேற்க https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfhNsnbaSCUPvotdrsNeqzVmNUa1jEcWx7tV5fv-72csoUHyQ/viewform?usp=sharing-amp;ouid=106859029795621361670 என்ற படிவத்தில் விவரத்தை நிரப்பி அனுப்பவேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாமிற்குச் சென்றால் பல்வேறு பலன்கள் மாத சம்பளம் வாங்குவோருக்கு நல்ல பலன் கிடைக்கும். பிஎஃப் கணக்கில் பிரச்சனை தொடர்பாக கணக்கு வைத்துள்ளவர்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் முதலாளிகளிடமிருந்து பெறப்படும் புகார்கள் அல்லது குறைகள் இந்த முகாமில் நிவர்த்தி செய்ய உடனே உதவுவார்கள். அத்துடன் தொழிலாளர்களுக்கு பிஎஃப் தொடர்பான ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துவது குறித்த உரிய விளக்கங்கள் அளிக்கப்படும். அதேபோல் பிஎஃப் திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை இங்கே சமர்ப்பிக்கலாம்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications