பிஎப் அட்வான்ஸ் இனி இல்லை.. சலுகை ஓவர்! மேஜர் அறிவிப்பை வெளியிட்ட இபிஎப்ஓ.. ரொம்பவே முக்கியம்
சென்னை: இனிமேல் குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே முன்பணம் பெற முடியும் என்றும், கொரோனா காலத்தை ஒட்டி பயனாளிகளுக்கு வழங்கி வந்த முன்பணம் பெறும் வசதி இனி கிடையாது என்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப்ஓ 6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு வரும் இபிஎப்ஓ, சமீபத்தில் பயனர்கள் முன்பணம் பெறுவதற்கான விதிமுறைகளை எளிதாக்கியது.

அதன்படி, கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுவது போன்ற கோரிக்கைகளுக்கு முன்பணம் பெற ஆட்டோ - மோட் செட்டில்மென்ட் எனப்படும் தானியங்கி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி விண்ணப்பித்த மூன்றே நாட்களில் பணம் கைக்கும் கிடைக்கும் என்று பிஎப் நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் தான் புதிய அறிவிப்பு ஒன்றை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகம் வெளியிட்டுள்ளது.
இபிஎப்ஓ விளக்கம்: இதன்படி, நிபந்தனையின்றி பிஎஃப் பணத்தை முன் பணமாக எடுப்பதற்கான சலுகை இனி கிடையாது என்று அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக இந்த சலுகை பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் திருமணம், உயர்கல்வி, வீடு, கட்டுமானம் போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே முன்பணம் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கொரோனா காலத்தை ஒட்டி பயனாளிகளுக்கு வழங்கி வந்த முன்பணம் பெறும் வசதி இனி கிடையாது என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இபிஎப்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா இனி பெருந்தொற்றாக இல்லை என்பதால் பிஎப் பணத்தில் இருந்து முன்பணமாக எடுக்கும் வசதி உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
2 முறை பணம் எடுக்கும் வசதி: விலக்கு அளிக்கப்பட்ட அறக்கட்டைகளுக்கும் இது பொருந்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டால் அதை சமாளிக்கும் விதமாக பிஎப் தொகையில் இருந்து இரண்டு முறை பணம் எடுக்கும் வசதி இருந்தது.
கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது அதாவது மார்ச் 2020 ல் அட்வான்ஸ் ஆக பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு இரண்டாவது அலையின் போது மே 31,2021ல் இருந்து இரண்டவாது முறையாக அட்வான்ஸ் தொகையை எடுத்துக் கொள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகம் அனுமதி வழங்கியிருந்தது.
பிஎப் தொகையை இனி இந்த சூழலில் மட்டுமே முன்பணமாக பெற முடியும்:
* வீடு கட்டுமானம்
* நிறுவனம் மூடப்பட்டால்
* உடல் நலக்குறைவு
* திருமண செலவுகள்
* குழந்தைகளின் கல்வி செலவுகள்
* இயற்கை பேரிடர்
* மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் தேவையான உபகரணங்களை வாங்க..
* ஓய்வு பெறுவதற்கு முந்தைய ஆண்டு
* பென்ஷன் பிமா யோஜனா திட்டத்தில் முதலீடு
இதுபோன்ற காரணங்களுக்காக மட்டுமே இனி பிஎப் தொகையில் முன்பணமாக எடுத்துக் கொள்ள முடியும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது இந்தியாவில், தொழிலாளர்களுக்கான மிக முக்கிய ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகப் பார்க்கப்படுகிறது. தொழிலாளர் வைப்பு நிதிக்கு ஊழியர் பணிபுரியும் நிறுவனமும், ஊழியரும் சமமான அளவில் தொகையை வழங்க வேண்டும்.
பணியாளர் ஓய்வு பெற்ற பிறகு இந்த சேமிப்பு பணம் ஊழியரது கணக்கில் வரவு வைக்கப்படும். ஓய்வு வரும் காலத்தில் ஊழியருக்கு குறிப்பிட்ட அளவிலான நிதி பாதுகாப்பை ஊழியருக்கு வருங்கால வைப்பு நிதி அளிக்கிறது. வருங்கால வைப்பு நிதியின் முக்கிய நோக்கம் என்னவென்றால், ஊழியர்களுக்கு நிதி அளவில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே ஆகும்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications