நாங்களாக பார்த்து கொடுக்குற சீட்டுல.. நிக்கட்டும்.. அண்ணாமலைக்கு செக் வைத்த அதிமுக.. ஆஹா போச்சே!
சென்னை: நாங்களாக பார்த்து ஏதாவது இடம் கொடுப்போம். அதை அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதான் தமிழ்நாட்டில் அவர்கள் நிலை என்று அண்ணாமலை அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார் .
அதிமுக - அண்ணாமலை இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.சமீபத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசிய அண்ணாமலை, பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும்.

எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.
கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன்.
கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றியை முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை.
தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்தும் செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

இதையடுத்து சமீபத்தில் திமுகவின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில் அதிமுகவிற்கு எதிராகவும் சில விஷயங்களை அண்ணாமலை பேசினார்.
அதாவது அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட போவதாக மறைமுகமாக கருத்து சொன்னார்.
அவர் தனது பேட்டியில், ஊழல் பட்டியலில் திமுகவிற்கு எதிராக பற்றி மட்டும் பேச மாட்டேன். ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றால் அடிப்படையை அப்படியே எதிர்க்க வேண்டும். அடி ஆழத்தில் இருந்து எதிர்க்க வேண்டும். திமுக பைல்ஸ் என்பது இப்போது முடிய போவது இல்லை.
இது பார்ட் 1னுடன் முடியாது. தமிழ்நாட்டில் எந்த கட்சி எல்லாம் இதுவரை ஆட்சி செய்து இருக்கிறதோ அந்த கட்சி எல்லாம் பற்றி பேசுவோம். அத்தனை கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசுவோம், என்று கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அண்ணாமலை பெயரை கேட்டதும் கோபம் அடைந்த எடப்பாடி தனது பேட்டியில், அண்ணாமலை பற்றி என்னிடம் கேட்காதீங்க. அவரை பற்றி என்னிடம் பேச வேண்டாம்.
முதிர்ந்த அரசியல்வாதிகளைப் பற்றி கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன். அவர் இப்படி பேசி பேசித்தான் பிரபலம் ஆகி உள்ளார். அவர் பேட்டி கொடுத்து பிரபலம் ஆகி உள்ளார்.

அவர் ஊழல் பட்டியலை வெளியிட்டாரா என்று தெரியவில்லை. சொத்து பட்டியலை வெளியிட்டதாகவே தெரிகிறது என்று எடப்பாடி கூறினார்.
இது தொடர்பாக ஜெயக்குமார் ஊடகங்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கை வெறும் 2 ஆண்டுகள் தான். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி.
எடப்பாடி கூறியதை போல அவர் ஒரு முதிர்ச்சியில்லாத தலைவர். அண்ணாமலையை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்று ஜெயக்குமார் கூறினார்.
இதனால் இரண்டு தரப்பிற்கும் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இந்த மோதல் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிபிசி தமிழ் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,
அண்ணாமலை திமுகவினர் சொத்து பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்.
அதற்கு திமுகவினர் பதில் சொல்லி உள்ளனர்.
இனி இதில் செயலாற்ற வேண்டியது அண்ணாமலை, திமுக பொறுப்பு.
அண்ணாமலை இந்த விவகாரத்தில் சிபிஐ, அமலாக்கத்துறைக்கு சென்று இருக்கலாம். புகார் கொடுத்து இருக்கலாம். ஆனால் அவர் அப்படி எல்லாமே செய்யவில்லை. மாறாக எங்களை ஏன் சம்பந்தமே இன்றி டச் செய்கிறார்.
நாங்கள் பயப்படுவோம் என்று அவர் நினைத்துக்கொண்டு இருக்கிறாரா. இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் எதற்கும் பயப்படாதவர்கள்.
அண்ணாமலையால் கூட்டணியை முடிவு செய்ய முடியாது.டெல்லிதான் அவர்கள் கட்சியில் கூட்டணியை முடிவு செய்யும். தேசிய தலைமைதான் அங்கே கூட்டணியை முடிவு செய்யும் என்பதை மறக்க வேண்டாம்.
அண்ணாமலை வந்து இரண்டு வருடம்தான் ஆகிறது. அவரே இப்போது புரபேஷன் காலத்தில்தான் இருக்கிறார்.
அவர் எப்படி கூட்டணியை முடிவு செய்ய முடியும்.
ஏற்கனவே நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் என்று அமித் ஷா - எடப்பாடி சொல்லிவிட்டனர். இதில் அண்ணாமலை சொல்ல என்ன இருக்கிறது.
இது அதிமுக தலைமையிலான கூட்டணி. எங்களிடம் எத்தனை இடம் வேண்டும் என்று அவர்கள்தான் வந்து கேட்க வேண்டும்.
அவர்கள் இடங்கள் கேட்பார்கள். நாங்களாக பார்த்து ஏதாவது இடம் கொடுப்போம். அதை அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதான் தமிழ்நாட்டில் அவர்கள் நிலை என்று, ஜெயக்குமார் காட்டமாக பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
-
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
எப்பா தம்பிகளே! கொரோனாவுல உங்களுக்கு ஆல் பாஸ் போட்டது நான்தான்! அதிமுகவை மறக்கலாமா? இபிஎஸ் கலகல -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம்












Click it and Unblock the Notifications