லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி!
சென்னை: தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பிரசாரம் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. பொதுவாக, ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலைகளை அறுவடை செய்ய வேண்டிய எதிர்க்கட்சி, இந்த முறை 'ரூட்' மாறி பயணிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

அரசியல் நாகரிகமா? தனிநபர் தாக்குதலா?
எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய மேடைப் பேச்சுகள் அனைத்தும் மாநிலத்தின் வாழ்வாதாரப் பிரச்னைகளை விடுத்து, கோபாலபுரம் குடும்பத்தை நோக்கியே சுழல்கின்றன. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் கனிமொழி ஆகியோரை நோக்கி வீசப்படும் விமர்சனங்கள் கொள்கை ரீதியாக இல்லாமல், தனிநபர் தாக்குதலாக உருவெடுத்துள்ளது.
கருணாநிதி குறித்த விமர்சனம்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து ஈபிஎஸ் முன்வைக்கும் விமர்சனங்கள், நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
விமர்சனத்தின் தரம்: "அரசு என்ன செய்தது?" என்று கேட்பதை விட்டுவிட்டு, "அவர்கள் குடும்பம் என்ன செய்கிறது?" என்று எடப்பாடி கேட்பது அதிமுகவின் பாரம்பரிய கண்ணியமான பிரசார பாணிக்கு நேர் எதிராக இருப்பதாக சீனியர்களே முணுமுணுக்கிறார்கள்.
மறக்கப்பட்ட தேர்தல் அறிக்கை: எங்கே போனது அதிமுகவின் வாக்குறுதிகள்?
எந்தவொரு தேர்தலிலும் ஒரு கட்சியின் 'மேனிஃபெஸ்டோ' தான் அதன் முகம். ஆனால், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட திட்டங்களை எடப்பாடி பழனிசாமி மேடைகளில் மக்களிடம் கொண்டு சேர்க்கத் தவறிவிட்டார் என்பதே நிதர்சனம். அதிமுக வாக்குறுதி டாப் நாட்ச்.. ஆனால் அதை எடப்பாடிதான் பேச மறந்துவிட்டார்.
மாநிலப் பிரச்னைகள் 'மிஸ்ஸிங்': நீட் தேர்வு, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, போதைப்பொருள் புழக்கம் போன்ற மாநிலம் தழுவிய முக்கியப் பிரச்னைகளை முன்வைத்து ஆளுங்கட்சியைத் திணறடிக்க வேண்டிய இடத்தில் அதிமுக தடுமாறி நிற்கிறது.
விவரிப்பு (Narrative) தோல்வி: தேர்தலுக்கான ஒரு வலுவான 'நரேட்டிவ்'வை (Narrative) உருவாக்குவதில் அதிமுக கோட்டை விட்டுள்ளது. திமுகவின் 'பாசிச எதிர்ப்பு' முழக்கத்திற்கு இணையாக, அதிமுக ஒரு மக்கள் நலன் சார்ந்த முழக்கத்தை முன்னிறுத்தவில்லை.
திமுகவுக்கு இது 'சேஃப்' கேமா?
எடப்பாடி பழனிசாமி தனிநபர் விமர்சனங்களில் கவனம் செலுத்துவது, மறைமுகமாக திமுகவுக்கே சாதகமாக அமைந்துவிட்டது. ஆளுங்கட்சியின் குறைகளை மக்கள் விவாதிக்க வேண்டிய நேரத்தில், எடப்பாடியின் பேச்சுகளைப் பற்றிய விவாதங்களே அதிகம் நடக்கின்றன.
அதே சமயம் எடப்பாடி பழனிசாமியின் இந்தத் தேர்தல் பிரசாரத்தில் இருக்கும் ஒரு மிகப்பெரிய பாசிட்டிவ் அம்சம், அவரது அசுர வேகமும் இடைவிடாத களப்பணியும்தான். தன்னிடம் பெரிய ஸ்டார் பேச்சாளர்கள் இல்லை என்ற குறையைத் தனது ஒற்றை ஆள் பிரசாரத்தின் மூலம் ஈடுகட்டி வருகிறார் ஈபிஎஸ். குறிப்பாக, காவிரி டெல்டா முதல் கொங்கு மண்டலம் வரை ஒவ்வொரு சிறிய கிராமத்திலும் அவர் மேற்கொள்ளும் வாகனப் பிரசாரம், தொண்டர்களுக்கு ஊக்கமாக உள்ளது.
கூட்டணி பலம் பெரிய அளவில் இல்லை என்றாலும், "நான் இருக்கிறேன்" என்று அவர் காட்டும் துணிச்சல் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடையே பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது. மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மிக எளிமையான மொழியில் சாமானிய மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அவர் வெற்றி பெற்றுள்ளார். ஒரு முதலமைச்சராக இருந்தவர் என்ற பிம்பத்தைத் தாண்டி, அவர் மக்களிடம் உரையாடுவது, அதிமுகவின் பாரம்பரியமான கிராமப்புற வாக்கு வங்கியைத் தக்கவைக்க உதவும் ஒரு பலமான உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications