தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதா? - பதில் அளிக்க மறுத்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை: தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க மறுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் திமுகவைச் சேர்ந்த எம்.சண்முகம், எம்.எம்.அப்துல்லா, பி.வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுகவைச் சேர்ந்த என்.சந்திரசேகர், பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இந்த 6 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ராஜ்யசபா வேட்பாளர்கள்
வரும் ஜூன் 9 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும் ஜூன் 12 ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் திமுகவுக்கு நான்கு ராஜ்யசபா இடங்களும் அதிமுகவுக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும்.
திமுக சார்பில் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும் கூட்டணிக் கட்சியான மநீம சார்பில் நடிகர் கமல்ஹாசனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி நீடிக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
சீட் கேட்கும் தேமுதிக
அப்போது, ஒரு இடத்தை தேமுதிக கட்சிக்குக் கொடுத்து அக்கட்சியைக் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடலாம் என பேசப்பட்டுள்ளது. அதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பும் ஒரு பிரிவினர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட்டது. அந்த கூட்டணியில் 5 இடங்கள் தேமுதிகவுக்கு வழங்கப்பட்டன. ஒரு மாநிலங்களவை இடமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், 'தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பது குறித்து எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை'' என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
எடப்பாடியை சந்தித்த சுதீஷ்
ஏற்கனவே உறுதி அளித்தபடி தங்களுக்கு மாநிலங்களவை சீட்டை அதிமுக வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் நேற்று சந்தித்துப் பேசினார்.
அப்போது சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்புவதாகவும், தற்போது மாநிலங்களவை தேர்தலில் தங்களுக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் எனவும் சுதீஷ் பேசியதாக கூறப்படுகிறது. அதற்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து பதில் அளிப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதில் சொல்ல மறுத்த எடப்பாடி
தேமுதிகவுக்கு அதிமுக மாநிலங்களவை சீட் வழங்கினால் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா எம்.பி ஆவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்றோ, நாளையோ இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள், தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர். செய்தியாளர்களின் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க மறுத்து அங்கிருந்து கிளம்பினார் எடப்பாடி பழனிசாமி. இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications