Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் யாருன்னு காட்ட வேண்டிய நேரம் வந்துருச்சு.. களமிறங்கிய எடப்பாடி! ’மாஜி’க்களுக்கு பறந்த ஆர்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் தரப்புக்கு தாவி வரும் நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் ஓபிஎஸ்ஸிடம் இருக்கும் இரு 'முக்கிய' நிர்வாகிகளை தங்கள் தரப்புக்கு கொண்டு வர முன்னாள் அமைச்சர்களுக்கு இபிஎஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வந்தாலும் தற்போதைய பரபரப்பு அணி மாறும் நிகழ்வுகள் தான். எடப்பாடி பழனிசாமி தான் தங்கள் தலைவர் என போன வாரம் வரை முழங்கிக் கொண்டிருந்த பலர் தற்போது ஓபிஎஸ் அணியில் ஐக்கியமாகியுள்ளனர்.

இதனால் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு அதிமுகவில் சரிந்து வருவதாக கூறினாலும் அப்படியெல்லாம் இல்லை, ஒன்றிரண்டு ஒன்றிய செயலாளர்கள் மட்டும் தான் ஓபிஎஸ் தரப்பிடம் உள்ளனர். மற்றபடி தங்கள் தரப்பில் 60க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் உள்ளனர் என்கின்றனர் இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள்

அதிமுக மாவட்ட செயலாளர்கள்

அதிமுகவைப் பொருத்தவரை மிக முக்கிய தலைவர்களாக பார்க்கப்படும் சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், செங்கோட்டையன், ஆர்பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, அன்பழகன் உள்ளிட்ட பலரும் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவாக உள்ளனர். இதேபோல் சார்பு அணிகளான இளைஞர் இளம்பெண்கள் பாசறை, இளைஞரணி, அம்மா பேரவை உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் எடப்பாடிக்கே ஆதரவாக வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

ஆனால் ஓபிஎஸ் அணியில் அவரைத் தவிர வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் மட்டுமே தெரிந்த முகங்கள். மற்றபடி ஒ.செ.க்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் நிர்வாகிகள் என கட்சியில் இருந்து பல ஆண்டுகளாக ஓரம் கட்டப்பட்டிருந்த நிர்வாகிகள் தற்போது தங்களுக்கு அடையாளம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேறு வழியின்றி ஓபிஎஸ்ஐ சந்தித்து வருவதாகவும் அவர்களை வைத்து அவருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த அதிமுகவே இருப்பது போல எடப்பாடி ஆதரவாளர்கள் செய்தி பரப்பி வருகின்றனர் என்கின்றனர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள்.

ஆதரவு குறைவு தான்

ஆதரவு குறைவு தான்

தற்போது அதிமுகவை பொருத்தவரை வெல்லமண்டி நடராஜன், தேனி சையது கான் உள்ளிட்ட ஐந்து அல்லது ஆறு மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஓபிஎஸ்-க்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இடம் 60க்கும் மேற்பட்ட அதிமுக அமைப்பு மாவட்ட செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகளின் ஆதரவு உள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி அடுத்து பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டாலுமே எடப்பாடி பழனிச்சாமி தான் மீண்டும் அதிமுகவின் ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

பேச்சுவார்த்தை தொடக்கம்

பேச்சுவார்த்தை தொடக்கம்

இல்லையில் ஓபிஎஸ் குறித்து கொங்கு மண்டல நிர்வாகிகள் சில நேரம் விசாரித்த போது எல்லோருக்கும் ஓபிஎஸ்சை சந்திக்கும் நிர்வாகிகள் குறித்து தகவல் எடப்பாடி பழனிச்சாமி இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இனி அமைதி காத்தால் சரியாக இருக்காது எனக் கூறியவர் ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகளை தங்கள் தரப்புக்கு வர வைக்க வேண்டும் என மூத்த முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து மத்திய மண்டலத்தைச் சேர்ந்த ஒருவர் தென் கடைக்கோடியில் இருக்கும் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மீனவ மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என மூன்று மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+