ஆர்ஜே பாலாஜி பேசியதை ஏத்துக்க முடியல! அவமானப்படுத்திட்டாரு! கமலுக்கு அடுத்து சூர்யா தான்.. போஸ் வெங்கட் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் சமீபத்தில் ஆர்.ஜே பாலாஜி குறித்து பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. சினிமாவில் கருத்து வேறுபாடுகள், அரசியல் பார்வைகள், பிரமோஷன் மேடை பேச்சுகள் என் இவை எல்லாம் வழக்கமான விஷயங்களாக இருந்தாலும், பல மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தின் கசப்பை இப்போது வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

அதிலும், "என்னை அவமானப்படுத்தினார்", "அவர் மீது எனக்கு ரொம்ப கோபம் இருந்தது" என்று போஸ் வெங்கட் நேரடியாக கூறியிருப்பது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Bose Venkat RJ Balaji Suriya Karuppu

கங்குவா மேடையில் ஆரம்பித்த பிரச்சனை?

இந்த விவாதத்தின் தொடக்கம் சூர்யா நடித்த கங்குவா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் ஏற்பட்டிருக்கிறது. அந்த விழாவில் பேசிய போஸ் வெங்கட், சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என்ற கருத்தை வெளிப்படையாக கூறியிருந்தார்.

அது அப்போது பெரிய விவாதமாக மாறியது. ஏனெனில் சூர்யா அரசியல் குறித்து எந்தத் தெளிவான கருத்தும் சொல்லாத நேரத்தில், அவரை அரசியலுக்கு அழைக்கும் பேச்சு தேவையா என்ற கேள்விகள் எழுந்தன. அதைத்தொடர்ந்து கருப்பு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் ஆர்.ஜே பாலாஜி பெயர் சொல்லாமல் பதிலடி கொடுத்தார்.

"ஒரு நடிகரின் விருப்பமே இல்லாமல், மேடையில் அரசியல் பற்றி பேசுவது சரியல்ல. நாம் எந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும். மனதில் தோன்றியதை எல்லாம் பேசும் இடம் இது அல்ல" என்று ஆர்.ஜே பாலாஜி கூறியிருந்தார். அப்போது பெயர் சொல்லப்படாத போதிலும், இந்த கருத்து போஸ் வெங்கட்டுக்கான பதில்தான் என்று சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

போஸ் வெங்கட் பேச்சு

இப்போது இதே விஷயத்தை நேரடியாக நினைவுபடுத்தியிருக்கிறார் போஸ் வெங்கட். சமீபத்திய பேட்டியில் அவர், "கங்குவா ஆடியோ லாஞ்சில் நான் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என்று சொன்னேன். உடனே ஆர்.ஜே பாலாஜி முந்திரிக்கொட்டை மாதிரி வந்து, என் கருத்தை பேச விடாமல் என்னை அவமானப்படுத்துற மாதிரி பேசினார். அதுமட்டுமில்லாமல் வெளியேயும் என்னைப் பற்றி பேசி அவமானப்படுத்தினார்" என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகளே தற்போது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.

அவர் மீது ரொம்ப கோபம்

அதோடு அவர் தனது மனக்கசப்பையும் மறைக்கவில்லை. "எனக்கு ஆர்.ஜே பாலாஜி மீது ரொம்ப கோபம் இருந்தது. ஆனாலும் கருப்பு படம் இணையத்தில் கசிந்தபோது முதலில் குரல் கொடுத்தது நான்தான்" என்று கூறியுள்ளார். இந்த கருத்து பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. தனிப்பட்ட கோபம் இருந்தாலும், ஒரு படைப்பாளியின் உழைப்பை மதித்து ஆதரித்ததாக அவர் சொல்லியிருப்பது வேறு கோணத்தில் பேசப்படுகிறது.

சூர்யா மீது கொண்ட பாசம்

இந்த பேட்டியில் சூர்யா குறித்து போஸ் வெங்கட் எமோஷனலாக பேசியிருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது. "சூர்யா சார் எனக்கு ரொம்ப பிடிக்கும். கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்புக்காக தன்னை இவ்வளவு வருத்திக்கொண்டு கஷ்டப்படுபவர் சூர்யாதான். அவரை நான் எப்போதுமே தலைவராக பார்க்கிறேன். சமீபகாலமாக அவருக்கு வெற்றி கிடைக்காதது எனக்கு வருத்தமாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், "இப்போது கருப்பு மூலம் சூர்யாவுக்கு பெரிய வெற்றி கிடைத்திருப்பதால் எனக்கு மகிழ்ச்சி. அதனால்தான் ஆர்.ஜே பாலாஜி மீது இருந்த கோபமும் போய்விட்டது" என்றும் கூறியுள்ளார்.

கருப்பு கொடுத்த பெரிய திருப்பம்

சூர்யாவுக்கு கருப்பு படம் உண்மையிலேயே முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக எதிர்பார்த்த வசூல் வெற்றி இந்த படம் மூலம் கிடைத்திருக்கிறது.

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம், குடும்ப ரசிகர்கள் முதல் பெண்கள் வரை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நீதி, உணர்ச்சி, ஆக்ஷன் ஆகியவை கலந்த திரைக்கதை ரசிகர்களிடம் வேலை செய்திருக்கிறது. இதனால் ஆர்.ஜே பாலாஜி இயக்குநராக புதிய உயரத்திற்கு சென்றுள்ளார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

போஸ் வெங்கட் ஏன் அடிக்கடி சர்ச்சையில்?

போஸ் வெங்கட் வெறும் நடிகர் மட்டுமல்ல; தன்னுடைய அரசியல் கருத்துகளையும் சமூக பார்வைகளையும் வெளிப்படையாக சொல்லும் நபர். அதனால்தான் அவர் பேச்சுகள் அடிக்கடி விவாதமாக மாறிவிடுகிறது. குறிப்பாக விஜய் அரசியல், நடிகர்கள் அரசியலுக்கு வருவது போன்ற விஷயங்களில் அவர் முன்பும் பலமுறை கருத்து தெரிவித்திருக்கிறார். இப்போது ஆர்.ஜே பாலாஜியை நேரடியாக பெயர் சொல்லி பேசியிருப்பதும் அதே மாதிரி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்த பேச்சுக்கு mixed reaction உருவாகியுள்ளது. "போஸ் வெங்கட் மனதில் இருந்ததை நேராக சொல்றார்" என்று சிலர் ஆதரிக்கிறார்கள். மற்றவர்கள், "இவ்வளவு நாள் கழிச்சு இதை இப்போ பேச வேண்டிய அவசியம் என்ன?", "கருப்பு வெற்றி ஓடிக்கிட்டிருக்கும்போது தேவையில்லா சர்ச்சையா?" என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+