"கணக்கும் வந்துருச்சு.." கட்டிடமும் வந்துருச்சு! கலகலப்பில் எடப்பாடி.. கவலையில் பன்னீர்செல்வம்
சென்னை: அதிமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், கட்சியின் வங்கிக் கணக்குகளை கையாள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கட்சியின் தலைமை அலுவலக சாவியையும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அதிமுக ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டாலும், வங்கிக் கணக்குகளையும் கட்டிடத்தையும் முடக்கிவிடலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் போட்ட திட்டங்களும் இன்று தோல்வியில் முடிவடைந்து இருக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளராக பல்வேறு தடைகளை மீறி பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தடுத்த நெருக்கடிகளில் இருந்து வெற்றிபெற்று முன்னேறி வருகிறார்.

பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகள், போராட்டங்களை கடந்து, கடந்த 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது. அதில் எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பார்த்ததைபோல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக பொறுப்பேற்றார்.

தலைமையகத்தில் தகராறு
அதே நேரம் பொதுக்குழுவுக்கு செல்லாத ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பெரும் திரளாக சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையை கைப்பற்றினர். இதனை கேள்விப்பட்டு அங்கு வந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் வருவாய் துறையினர் அதிமுக தலைமையகத்துக்கு சீல் வைத்தனர்.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சதீஷ்குமார் அமர்வு விசாரித்து வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி அளித்தார். அதில் கட்சியின் தலைமையக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
Recommended Video

வங்கிகள் முடிவு
முன்னதாக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் பொருளாளராகவும் தன்னுடைய அனுமதியின்றி வங்கி பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கக்கூடாது என்று வங்கிகளுக்கு கடிதம் எழுதினார், ஓ.பன்னீர்செல்வம். அதேநேரம் எடப்பாடி பழனிசாமியோ, திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக வங்கிகளுக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கைகளை நிராகரித்த வங்கிகள் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு வங்கிக் கணக்குகளை ஒப்படைத்து உள்ளன.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications