Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NDA தொகுதி பங்கீடு இழுபறியால் கண் சிவந்த அமித்ஷா.. உடனடியாக டெல்லி புறப்பட்டார் எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக பலமான கூட்டணியை கட்டமைத்துள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு, கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

EPS delhi visit

அதிமுக பாஜக கூட்டணி

அதிமுக தரப்பில் பாஜக, அமமுக, அன்புமணி தலைமையிலான பாமக, தமாகா, தமமுக, ஐஜேகே, புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி என கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையிலும் கூட, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருந்தது. அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி அமைந்துள்ளதாக சொல்லப்பட்டாலும், கூட்டணிக்குள் அன்புமணியின் பாமக, அமமுக மற்றும் சிறிய கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வந்தது பாஜக தான். எனவே கூட்டணி கட்சிகள் எல்லாம் பாஜவிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும் நாங்களே தொகுதிகளை பங்கிட்டு கொடுக்கிறோம். நீங்கள் மொத்தமாக தொகுதிகளை எங்களுக்கு கொடுங்கள் என பாஜக கேட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது.

மதுரையில் தொகுதி பங்கீடு பேச்சு

இந்நிலையில் நேற்று மதுரையில் என்.டி.ஏ கூட்டணியின் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். என்.டி.ஏ கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று காலை மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் கூட்டணி தேர்தல் வியூகங்கள் குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி வேலுமணி, நயினார் நாகேந்திரன், அன்புமணி, டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், ஏசி.சண்முகம், பாரிவேந்தர், ஜெகன்மூர்த்தி, ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

இழுபறி

பிரதமர் சென்ற பின் விமான நிலையத்தில் மீண்டும் அனைவரும் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து சிந்தாமணி பகுதி சுற்றுச்சாலை நட்சத்திர ஓட்டலில் மீண்டும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இரவு வரை பேச்சுவார்த்தை நடத்தினார் பியூஷ் கோயல். ஆனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து நேற்று இரவு 9.30 மணியளவில் விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. கூட்டம் தொடர்பாக பேட்டியளித்த பியூஸ் கோயல், "தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தேர்தல் வெற்றி குறித்து ஆலோசனை நடத்தினோம்" எனத் தெரிவித்தார்.

டெல்லி அப்செட்

பிரதமர் மோடி வருகைக்கு முன்பே, என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், மோடி 2 முறை தமிழகம் வந்த பின்னும் இன்னும் தொகுதிப் பங்கீடு நிறைவடையாததால் அமித்ஷா அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை அவர் டெல்லிக்கு அழைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி டெல்லி பயணம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.45 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்றும், அதாவது 35 தொகுதிகள் வேண்டும் என்றும் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி மற்றும், கடந்த 2024 மக்களவை தேர்தலில் தனி அணியாக நின்று 18 சதவீதம் வரை வாக்குகளை பெற்றதைச் சுட்டிக்காட்டி கூடுதல் தொகுதிகளை கேட்கிறது பாஜக.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+