“இதுகூட தெரியாமல் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறாரே..” தவெக விஜய்க்கு பதிலடி கொடுத்த எடப்பாடி!
சென்னை: மதுரை மாநாட்டில் அதிமுக குறித்த விஜய்யின் விமர்சனத்திற்கு, காஞ்சிபுரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். விஜய் அறியாமையில் பேசுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஒரு கட்சிக்குத் தலைவராக இருக்கும் இவரை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள் எனவும் விமர்சனம் செய்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவை விமர்சித்த விஜய்
இன்று மதுரையில் நடைபெற்ற 2ஆவது மாநில மாநாட்டில் அதிமுகவை சீண்டிப் பேசினார் விஜய். விஜய் பேசுகையில் "மக்களுடைய அன்பும், ஆசியும் நம்முடன் இருக்கும்போது பாசிச பாஜக உடன் மறைமுக, நேரடி கூட்டணி எதுக்குங்க.. நாம் உலக மகா ஊழல் கட்சியா என்ன? மக்கள் சக்தியே நம்முடன் அணியா அணியா திரண்டு இருக்கும்போது இந்த அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் நமக்கு எதுக்குங்க?" என்றார்.
மேலும், "எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரைக்கும் முதலமைச்சர் சீட் குறித்து யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியல... கனவு கூட காண முடியல.. ஆனால் இப்போ அவர் ஆரம்பித்த அந்த கட்சியை, கட்டிக்காக்கிறது யார்? அந்த கட்சி இப்போ எப்படி இருக்கிறது. நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா என்ன? அப்பாவி தொண்டர்கள் வேதனையை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். பொருந்தாக் கூட்டணியாக அதிமுக - பாஜக கூட்டணி உள்ளது" எனப் பேசினார் விஜய்.
எடப்பாடி பழனிசாமி பதிலடி
விஜய் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரத்தில் பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "அதிமுக யாரிடம் உள்ளது என்று ஒருவர் வரலாறு தெரியாமல் அறியாமையில் பேசுகிறார். இதுகூட தெரியாமல் ஒரு கட்சிக்கு எப்படி தலைவர் இருக்க முடியும்? இவரை நம்பி இவரின் பின்னால் இருப்பவர்களின் நிலை என்ன ஆகும். நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சில பேர் சில கருத்துகளை தம் இஷ்டம் போல பேசுகிறார்கள்.
அதிமுக அப்படி அல்ல. ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி, அதன் மூலமாக ஏற்றம் பெற்ற கட்சி அதிமுக. ஒரு மரம் எடுத்ததுமே பழம் தருவதில்லை. பூ பூத்து, காயாகி, கனியைக் கொடுக்கும். அப்படித்தான் எம்ஜிஆர் கட்சி தொடங்கி, உழைத்து ஆட்சியைப் பிடித்தார்.
கட்சி தொடங்கியதும் ஆட்சிக்கு வர முடியாது
ஆட்சி அமைக்க கடுமையாக உழைக்க வேண்டும். புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் நம் தலைவர்களின் படங்கள் வைத்து தான் தொடங்குவார்கள். உழைப்பை தராமல் சிலர் பலனை எதிர்பார்க்கிறார்கள். கட்சி தொடங்கிய உடனே ஆட்சிக்கு வந்துவிடமுடியாது. திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி அதிமுக தான்" எனப் பேசியுள்ளார் இபிஎஸ்.
-
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா?












Click it and Unblock the Notifications