சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆட்சித்தேர் சரியாக செயல்பட அச்சாணியாக இருப்போம்...எதிர்கட்சி பணிகளை சரியாக செய்வோம் - ஓபிஎஸ்,இபிஎஸ்

அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: நிர்வாகம் என்ற நாணயத்தில் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்கட்சி ஆட்சித்தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாக இருப்போம் என்றும் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஆளும்கட்சியாக இருந்த அதிமுக எதிர்கட்சி வரிசையில் அமரப்போகிறது. அதிமுகவிற்கும் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களித்த அனைவருக்கும் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நன்றி கூறியுள்ளனர்.

EPS, OPS thank voters Let’s do the opposition party work right

இது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளும் கட்சி மற்றொரு பக்கம் எதிர்கட்சி. ஆட்சித்தேர் உறுதியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாக செயல்பட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

தமிழக சட்டசபையிலும், ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்கட்சி என்னும் பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அவை அனைத்தையும் செவ்வனே நிறைவேற்றுவோம்.

அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் வெற்றிக்காக அரும்பணியாற்றிய அனைவருக்கும் உளமாற நன்றி. தொடர்ந்து மக்கள் பணியாற்றுவதற்கும் அதிமுக கட்சியைக் காக்கும் கடமையில் தோளோடு தோள் நின்று உழைப்பதற்கும் உறுதியேற்க வேண்டும் என ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

திமுக, அதிமுக பெற்ற வாக்குசதவிகிதம் எவ்வளவு.. தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது? வெளியானது லிஸ்ட்!திமுக, அதிமுக பெற்ற வாக்குசதவிகிதம் எவ்வளவு.. தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது? வெளியானது லிஸ்ட்!

சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கட்சி உடைந்து விடக் கூடாது அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்றும் ஓபிஎஸ் இபிஎஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

English summary
OPS and EPS have jointly stated that the ruling party on the one hand and the opposition on the other will be the pillars of ensuring that the regime is paid properly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X