சசிகலா விவகாரம்... அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆலோசனை
சென்னை: சசிகலா விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இன்று ஆலோசனை நடத்தினர்.
Recommended Video

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா நாளை மறுநாள் தமிழகம் வருகை தருகிறார். அதிமுக நிர்வாகிகள் ஆங்காங்கே சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

சசிகலா ஆதரவு போஸ்டர்கள்
சென்னையில் அமைச்சர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலையிலும் கூட சசிகலா ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு வருகின்றனர்.

ஓபிஎஸ் தரப்பு
சசிகலா விவகாரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் தரப்பு இதுவரை அமைதியாக இருக்கிறது. ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், வெளிப்படையாக சசிகலா நலம்பெற வாழ்த்தும் சொல்லி இருக்கிறார்.

சசிகலா ஆதரவா?
மேலும் இந்த முறை சசிகலாவை ஓபிஎஸ் தரப்பு ஆதரிக்கும்; சசிகலாவை வரவேற்க ஓ. பன்னீர்செல்வமே செல்வார் எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆலோசனை
சசிகலா விவகாரத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை இணைந்து எடுப்பது? அதிமுக தலைமை கழகத்துக்கு சசிகலா வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது? ஏற்கனவே பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு விவரம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications