ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி!
சென்னை: அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது, அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டனர். துரோகம் செய்தவர்கள் என்றைக்கும் இருக்க மாட்டார்கள் ஆண்டவர் அவர்களை பார்த்துக் கொள்வான் எனவும், தேமுதிக ஐசியூவில் இருந்தது அவர்களுக்கு உயிர் கொடுத்தது அதிமுக தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பாஜக போட்டி இடுகிறது.
இந்ந்லையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வைரமுத்து மற்றும் விமல் ஆகியோரை ஆதரித்து புதுக்கோட்டை திலகர் திடலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
அப்போது பேசிய அவர்," புதுக்கோட்டை மாவட்டம் ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற மாவட்டம். இளைஞர்கள் ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் இது பாரம்பரிய விளையாட்டு. அதிமுக ஆட்சி அமைந்த உடன் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தினால் 5 லட்சம் ரூபாய் அரசு சார்பில் நிதி வழங்கப்படும். ஜல்லிக்கட்டில் உயிரிழப்பு ஏற்பட்டால் பத்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்படும். ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு இன்சூரன்ஸ் காப்பீடு அரச மூலமாக செய்து தரப்படும்.
ஜல்லிக்கட்டு
அதிமுக ஆட்சி வந்தவுடன் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு புதிய பொலிவோடு நடத்தப்படும். இன்றைய தினம் ஸ்டாலின் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்று கூறியுள்ளார். அப்படியா உள்ளது தமிழகம். அரசு அதிகாரிகளை கேட்டு அவர்கள் சொல்படி தான் அரசை நடத்தி வருகிறார் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின். பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. பல்வேறு குற்ற சம்பவங்கள் போதை கலாச்சாரத்தில் தான் நடக்கிறது.
ஸ்டாலின்
போதை விற்பனை தமிழகத்தில் நகர முதல் கிராமங்கள் வரை களை கட்டி வருகிறது. போதை பொருளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருப்பவர்களே ஆளுங்கட்சி நிர்வாகிகள் இதுதான். இந்த ஆட்சியில் சட்டம் இப்போது சந்தி சிரிக்கிறது. இத்தகைய ஆட்சி தொடர வேண்டுமா? நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது என்று ஸ்டாலின் கூறுகிறார். இதை கூற ஸ்டாலினுக்கு வெட்கமா இல்லை.
செந்தில் பாலாஜி
இன்று கரூர் மாவட்டத்தில் முதல்வர் செந்தில் பாலாஜி சிறப்பாக செயல்படுகிறார் என்று கூறியுள்ளார். பொதுமக்கள் இதை பார்த்துக் கொண்டுள்ளனர் அன்று முதலமைச்சர் என்ன பேசினார். இதை மக்கள் மறந்து விட்டார்களா? சரியான ஆப்பு வைக்க போகிறார்கள் கரூர் மாவட்ட மக்கள். அன்று பேசியது என்ன வாய் இன்று அவர் பேசியது எந்த வாய் என்று கூற வேண்டும். பத்து ரூபாயில் ஐஎஸ்ஐ முத்திரை பதித்தவர் தான் செந்தில் பாலாஜி அவரை புகழ்ந்து தள்ளுகிறார் ஸ்டாலின்.
கருணாநிதி திமுக
அண்ணா உருவாக்கிய திமுக தற்போது கருணாநிதி திமுகவாக மாறிவிட்டது. யாரெல்லாம் அதிமுகவிற்கு துரோகம் செய்தவரோ என்று அவர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டனர். துரோகம் செய்தவர்கள் என்றைக்கும் நன்றாக இருக்க மாட்டார்கள். இந்த இயக்கத்தை யாராலும் அசைத்துப் பார்க்கவோ தொட்டு பார்க்கவோ முடியாது.
தேர்தல் வாக்குறுதி
21-இல் நடைபெற்ற தேர்தலில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று கூறுகின்றனர் அவ்வாறு அவர்கள் நிறைவேற்றினாரா? ஊழலுக்காக இந்தியாவில் ஆட்சி கலைக்கப்பட்ட ஒரே அரசு எது என்றால் அது திமுக அரசு தான். ஊழலில் ஊற்று கண்ணே திமுக தான். ஊழலையும் திமுகவையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்கள் அதிமுகவைப் பற்றி பேச அருகதையோ தகுதியோ உள்ளதா?
அதிமுக ஆட்சி
தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும்தான் இந்த தேர்தல் என்று ஸ்டாலின் கூறுகிறார் அவருக்கு ஞாபக மறதி அதிகம் என்று நினைக்கிறேன். நடப்பது சட்டமன்ற தேர்தல். அதிமுக தான் ஆட்சி அமைக்கும் முதலமைச்சர் இபிஎஸ் தான் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. நம்மை குறித்து பேசுவதற்கு ஸ்டாலினிடம் சரக்கு இல்லை.
அதனால்தான் ஏதாவது பேச வேண்டும் என்று இவ்வாறு பேசி வருகிறார்.
தேமுதிக ஐசியூ
காங்கிரசுக்கும் திமுகவிற்கும் தான் இப்போது பிரச்சனை. திமுக எந்த கூட்டணிக்கு போனாலும் அது காலியாகிவிடும். அதேபோன்றுதான் இந்தியா கூட்டணி தற்போது காலி ஆகிவிட்டது. விளம்பரத்திலேயே தனது ஆட்சி காலத்தை தள்ளிய முதல்வர் ஸ்டாலினாகத்தான் இருப்பார். தேமுதிக ஐசியூவில் இருந்தது. தேமுதிகவிற்கு உயிர் கொடுத்தது அதிமுக தான்." என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!












Click it and Unblock the Notifications