மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வீட்டில் இருந்த கல்லூரி மாணவியை கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் ரீதியாக அத்துமீறியதோடு அவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் முதல்வர் ஸ்டாலின் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஒரு வார்த்தையாவது பேசுவாரா? என கேள்வி எழுப்பி இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை மீஞ்சூரில் உள்ள மசூதி தெருவில் கல்லூரி மாணவி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மாணவி தனது கல்லூரி தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக சொல்லப்படுகிறது. மாணவி சத்தம் போட்டதால் அந்த கும்பல் அவரை மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
படுகாயம் அடைந்த அந்த மாணவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும் என கூறியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை,
கொலை முயற்சி, இது தான் திமுக ஆட்சிக்காலம்! படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல். இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும்… pic.twitter.com/8mNuIWEjb9
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) April 15, 2026
நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்- இத்தனை நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா? தன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது என்று Idea-வே இல்லாத ஒரு Dummy முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும். ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்-
தமிழகம் வாழ வேண்டுமா? ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்! #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications