சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்?
சென்னை: சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வரும் அதிமுகவில், தற்போது புதிய சர்ச்சையாக வாரிசு அரசியல் பிரச்சினை வெடித்துள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை நேரடி அரசியலுக்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெறுவதாக வெளியான தகவல்கள், கட்சிக்குள் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கனவே தேர்தல் தோல்வி, உள்கட்சி மோதல்கள், நிர்வாகிகள் வெளியேற்றம், முக்கிய தலைவர்களின் அதிருப்தி என பல்வேறு சவால்களை சந்தித்து வரும் அதிமுக தலைமைக்கு, இந்த விவகாரம் கூடுதல் சிக்கலை உருவாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தின. தொடர்ந்து பல தேர்தல் தோல்விகளை சந்தித்திருந்தாலும், இந்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்தையே இழந்தது கட்சிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதிமுக உட்கட்சி மோதல்
இதன் விளைவாக பல்வேறு அணிகள் உருவாகின. சிலர் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி நகர முயன்றனர். சிலர் தலைமை மாற்றம் குறித்து பேச தொடங்கினர். இந்த சூழலில் முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் அதிமுக தலைமையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. பின்னர் வேலுமணி உள்ளிட்ட சிலர் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சமரசம் செய்துகொண்டாலும், அனைவரும் முழுமையாக இணைந்துவிட்டனர் என்று சொல்ல முடியாத நிலை தொடர்கிறது.
சி விஜயபாஸ்கர்
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. "உழைக்கும் உண்மை தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாக பார்க்கும் அரசியலும் வெற்றிக்கான பாதை அல்ல" என அவர் பதிவிட்டிருந்தார். மேலும், "வரலாறு எத்தனை பேரை நீக்கினோம் என்பதை நினைவில் வைக்காது. எத்தனை பேரை ஒன்றிணைத்தோம் என்பதையே நினைவில் வைக்கும்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி
இந்த பதிவு யாரை குறிவைத்து வெளியிடப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதிமுக தலைமையை மறைமுகமாக விமர்சித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். காரணம், கடந்த வாரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கருத்து சில நிர்வாகிகளால் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
மிதுன்
இளைஞர் அணி அல்லது தகவல் தொழில்நுட்ப அணியில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவே தற்போது கட்சிக்குள் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் ராஜ் சத்யனின் பதிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சித் தொண்டர்கள் பல்வேறு மனவேதனைகளை சந்தித்து வரும் நிலையில், தேவையற்ற விவாதங்களை உருவாக்குவது சரியல்ல என்ற கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ராஜ் சத்யன்
"தேர்தல் பின்னடைவு, அதன் பிறகு நடந்த உட்கட்சி சம்பவங்கள், தொண்டர்களின் உழைப்பை குறைத்து மதிப்பிடும் போக்குகள் என ஏற்கனவே பல வலிகளை சந்தித்து வருகிறோம். இந்த நேரத்தில் இப்படிப்பட்ட தேவையற்ற விஷயங்கள் பேசப்படுவது தவறு" என அவர் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து மிதுனை அரசியலுக்கு கொண்டு வருவதற்கு எதிரான நிலைப்பாடாகவே பார்க்கப்படுகிறது. அதிமுக உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து வாரிசு அரசியலை கடுமையாக விமர்சித்து வந்த கட்சியாக அறியப்படுகிறது.
வாரிசு அரசியல்
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தலைமையில் தனிநபர் கவர்ச்சியை அடிப்படையாக கொண்ட அரசியல் வளர்ந்த நிலையில், குடும்ப அரசியல் என்ற விமர்சனத்தை அதிமுக தொடர்ந்து திமுக மீது முன்வைத்து வந்தது. அப்படிப்பட்ட கட்சியிலேயே தற்போது வாரிசு அரசியல் குறித்த விவாதம் எழுந்திருப்பது பல தொண்டர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிருப்தி அணிகள்
கட்சிக்குள் ஏற்கனவே அதிருப்தி அணிகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் மேலும் பிளவை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மறுபுறம், மிதுனை அரசியலுக்கு கொண்டு வருவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேபோல் கட்சி தலைமையும் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவில்லை. அதே நேரத்தில் தேர்தல் தோல்விக்குப் பிறகு பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தங்களை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, மிதுன் விவகாரம் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications