என்ற குடும்பத்துல எல்லாரும் வந்தாச்சு.. ஒன்னு கூடிய டிடிவி - எடப்பாடி! ஓரமாக நிற்கும் ஓபிஎஸ்! பாவம்!
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் இன்று தனித்து நிற்கிறார். எடப்பாடியை எதிர்த்த டிடிவி தினகரன் அவருடன் ஒன்று சேர்ந்து விட்டார். ஒரு தாய் பிள்ளைகள் எனவும் பேசி விட்டனர். இந்த நிலையில் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் ஓபிஎஸ் உடன் பயணித்த பலர் அதிமுகவிலும் திமுகவிலும் இணைந்த நிலையில், தற்போதைக்கு தனித்து நிற்பது ஓபிஎஸ் மட்டும் தான்.
2026 தேர்தல் களம் பரபரப்பாகி வரும் நிலையில் மார்ச் மாதத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரலாம் என சொல்லப்படுகிறது. இதை அடுத்து திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன.
திமுகவை பொருத்தவரை கிட்டத்தட்ட கூட்டணி இறுதி செய்யப்பட்டது போல தான். தொகுதிகளை மட்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டி உள்ளது. ஆனால் அதிமுக பாஜக கூட்டணி மேலும் சில கட்சிகளை அழைத்து வந்து கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்க முயற்சித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக பாஜக கூட்டணி
தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டணிக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து இருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வந்தது. இதனை எடப்பாடி பழனிச்சாமியின் ஏற்றுக் கொண்டதாக சொல்லப்பட்டது.
எடப்பாடி டிடிவி தினகரன்
இதற்கிடையே டெல்லி சென்ற டிடிவி தினகரன் அமித் ஷாவை சந்தித்ததாகவும் அதிமுக பாஜக கூட்டணியில் சேர ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. அவருக்கு 10 தொகுதிகள் வரை ஒக்கீடு செய்யப்படலாம் எனவும் தகவல்கள் உலாவுகின்றன. இந்த நிலையில் மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்ற என்டிஏ கூட்டணியின் பிரம்மாண்ட மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அதற்கு முன்னதாக டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமி, பியூஸ் கோயல் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
ஓபிஎஸ் தனிமை
தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமியும் டிடிவி தினகரன் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு இருவருமே பதில் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுகவில் ஜெயலலிதா இருந்தபோது பலம் பொருந்திய நபராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதற்கு பிறகு கட்சி வேட்டியை கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சசிகலா எதிர்ப்பால் கட்சியில் இருந்து விலகிய அவர் பின்னர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கை கோர்த்தார். அப்போது சசிகலாவின் டிடிவி தினகரன் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஓ.பன்னீர்செல்வம்
தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களும் வெளியேறினர். இதற்கிடையே 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் கூட்டணி வைத்தனர். 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் எடப்பாடி பழனிச்சாமியும் டிடிவி தினகரன் கூட்டணி சேர்ந்திருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம் உள்ளிட்ட பலர் திமுகவுக்கு தாவி விட்டனர். எம்பி சீட்டு வாங்கி கொடுத்த தர்மரும் ஓ.பன்னீர்செல்வத்தை விட்டு விட்டு தற்போது அதிமுகவில் சேர்ந்து விட்டார். இப்படி ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணித்த பலரும் தற்போது ஒன்றாகிவிட்ட நிலையில் அவர் மட்டும் தனித்து நிற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Election Exclusive: எல்லாம் போச்சு.. இரட்டை இலையை கருக விட்ட எடப்பாடி! திமுக ’தலைகளை’ லாக் செய்ய லட்டு மாதிரி சான்ஸ்! -
அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. 2 மாஜி அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளித்த டிடிவி தினகரன் -
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
AMMK: அமமுக வேட்பாளர் ஆன பார் கவுன்சில் துணை தலைவர்.. யார் இந்த கார்த்திகேயன்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications