Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஒருங்கிணைந்த அதிமுக" செங்கோட்டையனின் ஒற்றை வார்த்தை.. மீண்டும் முதல் புள்ளிக்கு தள்ளப்பட்ட எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனின் திடீர் எதிர்ப்புக் குரல் காரணமாக, அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுக கோஷம் உயிர்ப் பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களாக எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் பற்றிய பேச்சுகள் அதிகரித்திருந்த நிலையில், மீண்டும் அதிமுக ஒருங்கிணைப்பு கோஷம் எழுந்திருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் அதிமுக தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கணிசமான இடங்களில் வென்றிருந்தாலும், ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமியை அக்கட்சி நிர்வாகிகள் பொதுச்செயலாளராக கொண்டு வந்தனர். அதன்பின்னரும் இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது.

EPS vs Sengottaiyan

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று அக்கட்சி தொண்டர்கள் பேசி வந்தனர். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வாக்கு சதவிகிதம் உயர்ந்ததால், கட்சி மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அதேபோல் அதிமுக முக்கியத் தலைவர்கள் விரும்பியதை போல் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால், ஓபிஎஸ் தரப்பை சேர்க்கும் பேச்சே எழவில்லை.

அதன்பின் பாஜக கூட்டணியில் இருப்பதாக கூறி வந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதனால் அதிமுக பலவீனம் அடைந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திற்கு மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் நல்லக் கூட்டம் கூடியது.

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைப்பதில் அதிமுக நிர்வாகிகள் தீவிரமாக மூழ்கியதால், யாரும் வாயே திறக்கவில்லை. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது 6 மாதத்திற்கும் மேலாக அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பிரிந்தவர்களையும் அரவணைத்து ஆட்சி நடத்தினார்கள்.

தென் மாவட்டங்களில் அதிமுக என்ன நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை என்றால், அதனை விரும்பும் அனைவரும் இணைந்து ஒன்றிணைப்போம். ஒருங்கிணைந்த அதிமுக வந்தால் மட்டுமே அதிமுக ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த பேட்டியில் செங்கோட்டையன் ஒருமுறை கூட எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூட சொல்லவில்லை. ஆனால் செங்கோட்டையனின் வார்த்தைகள் அதிமுக தொண்டர்கள் மத்தியில் மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுக என்ற கோஷத்திற்கு உயிர்க் கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த பேட்டிக்கு பின் கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையனுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதேபோல் தேனி மாவட்டம் கம்பத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தையே பெண்கள் முற்றுகையிட்டு ஒன்றிணைந்த அதிமுக பேனருடன் கோஷம் எழுப்பினர். இதனால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல் புள்ளியில் இருந்து தொடங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். தென் மாவட்டங்களில் மட்டுமல்லாமல் கொங்கு மண்டலத்திலும் இந்த கோஷத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

இதனால் வரும் நாட்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன பதில் கொடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் நீக்கத்திற்கு நியாயம் கற்பித்து வந்த எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக செங்கோட்டையனையும் நீக்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+