“எடப்பாடி வந்தா ஒரு சொட்டு மது இருக்காது.. முதல் கையெழுத்தே இதுதான்”.. சொல்வது செல்லூர் ராஜு
மதுரை: அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும். தமிழகத்தில் ஒரு சொட்டு மதுபானம் கூட இல்லாமல் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி முதல் கையெழுத்திடுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பது, தேர்தல் கூட்டணி அமைப்பது, தொகுதிப் பங்கீடு போன்ற பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இன்று, மதுரை முனிச்சாலை சந்திப்பில் அதிமுக சார்பில், 2026 சட்டமன்ற தேர்தல் அதிமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய நோட்டீஸை அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார். பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 உதவித்தொகை, அனைவருக்கும் அம்மா இல்லம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து, 150 நாட்கள் வேலைத் திட்டம், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 25,000 மானியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அண்ட நோட்டீஸில் இடம்பெற்றிருந்தன.
அதைத்தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், "விடியல் தருவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக மக்களுக்கு கஷ்டத்தையும், நஷ்டத்தையும் மட்டுமே தந்துள்ளது. திமுக ஆட்சியில் வரி மேல் வரி விதிப்பதால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்துள்ளனர். விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஃபேன் போட்டால் மின் கட்டணம் அதிகரிக்கும் என மக்கள் ஃபேனை கூட போட தயக்கம் காட்டுகிறார்கள்.
இந்தநிலையில், அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்து செல்கிறோம். அதிமுக சொல்வதை தான் செய்யும், செய்வதை தான் சொல்லும். ஆனால், இனி அதிமுக சொல்லாதையும் செய்யும். திமுக ஆட்சியில் புதிது புதிதாக ஊழல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் மதுபான விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்து உள்ளனர். 2021 ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும், தமிழகத்தில் ஒரு சொட்டு மதுபானம் கூட இல்லாமல் அண்ணன் ஸ்டாலின் முதல் கையெழுத்திடுவார் என கனிமொழி கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் தற்போது அதிகரித்துள்ளன. தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும். தமிழகத்தில் ஒரு சொட்டு மதுபானம் கூட இல்லாமல் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி முதல் கையெழுத்திடுவார். அதிமுக 10 ஆண்டுகளில் 17 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தது. ஆனால், திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 1 மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வரப்படவில்லை" எனப் பேசியுள்ளார்.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications