உள்ளே விடமுடியாது.. "நோ என்ட்ரி".. ஹெலிகாப்டரை வைத்து யு டர்ன் அடித்த கமல்ஹாசன்.. பரபரத்த சம்பவம்!
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடீரென தனது முக்கியமான 2 பிரச்சார திட்டங்களை இன்று ரத்து செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக சட்டசபை தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். முன்பு சென்னையில் பிரச்சாரம் செய்தவர் தற்போது கோவையில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளதால் அங்கு தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இதற்காக இன்று அதிகாலையில் இருந்து வித்தியாசமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

வித்தியாசம்
காலையிலேயே வாக்கிங் செல்வது, மக்களோடு மக்களாக இருந்து பிரச்சாரம் செய்வது, கோவை தெற்கு தொகுதியில் இருக்கும் முக்கியமான இடங்களை பார்வையிடுவது என்று கமல்ஹாசனின் பிரச்சாரம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. டெல்லியில் மக்களோடு மக்களாக அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்தது போலவே கமல்ஹாசனும் செய்து வருகிறார்.

ஹெலிகாப்டர்
இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் அண்டை மாவட்டங்களுக்கு செல்வதற்கு கமல்ஹாசன் ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகிறார். நேரத்தை குறைக்கும் என்பதாலும், எளிதாக மற்ற மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்பதாலும் கமல்ஹாசன் தனி ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகிறார். இதற்கான செலவை அவரே பார்த்துக் கொள்கிறார்.

தடை
இந்த நிலையில் இன்று கோவையில் இருந்து ஈரோடு, நாமக்கல் சென்று கமல்ஹாசன் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. மக்கள் நீதி மய்ய வேட்பளார்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக கமல்ஹாசன் ஈரோடு, நாமக்கல் செல்ல இருந்தார். இதற்காக ஹெலிகாப்டரில் செல்ல கமல்ஹாசன் திட்டமிட்டு இருந்தார்.

அனுமதி
இதற்காக இரண்டு மாவட்ட கலெக்டர்களிடம் அனுமதி கேட்டு இருந்தது. ஆனால் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் அனுமதி கொடுக்கவில்லை. மக்கள் நீதி மய்யம் வைத்த கோரிக்கையை 2 மாவட்ட ஆட்சியர்களும் நிராகரித்துவிட்டனர்.

நிறுத்தம்
பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர் இறங்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்த இரண்டு மாவட்டங்களுக்கான பிரச்சார திட்டத்தை ரத்து செய்துள்ளார். மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் இடையே இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய திட்டம் வகுத்து இங்கு கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications