ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்-ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத்துக்கு வழங்க கோரும் காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 2-வது முறையாக நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே இத்தொகுதியை ஒதுக்க வேண்டும்; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியானது தொகுதி மறுசீரமைப்பின் போது 2008-ம் ஆண்டு உருவானது. இத்தொகுதி உருவான பின்னர் 2011-ல் முதல் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் தேமுதிகவின் விசி சந்திரகுமார், இன்றைய அமைச்சர் திமுகவின் முத்துசாமியை தோற்கடித்தார். தற்போது விசி சந்திரகுமார் திமுகவில் இருக்கிறார்.

erode east by-election 2025 congress 2025

2016 சட்டசபை தேர்தலில் அதிமுகவின் கேஎஸ் தென்னரசு, மக்கள் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. விசி சந்திரகுமாரைத் தோற்கடித்தார்.

2021-ம் ஆன்டு சட்டசபை தேர்தலில் தந்தை பெரியாரின் கொள்ளுப் பேரனாகிய, திருமகன் ஈவெரா போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். திருமகனின் ஈவெராவின் தந்தைதான் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஆனால் திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவால் காலமானதால் கடந்த 2023-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வென்றார்.

2023-ம் ஆண்டு இடைத்தேர்தலில் வென்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், அண்மையில் உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில் காலமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி 2-வது முறையாக இடைத் தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த பின்னணியில் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் இன்று ஈரோட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே இந்தத் தொகுதியை ஒதுக்க வேண்டும்; ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் , தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்குதான் ஒதுக்க வேண்டும் என ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை வலியுறுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேபோல 2023-ம் ஆண்டு இடைத்தேர்தலில் போட்டியிட சஞ்சய் சம்பத் விருப்பம் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+